PDF chapter test TRY NOW
மேற்சொன்னவற்று ள் வெண்பாவின் இலக்கணத்தையும் அலகிடும். முறையினையும் தெரிந்துகொள்வோம்.
குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதலடி நான்கு சீராகவும். (அளவடி) இரண்டாம் அடி மூன்று சீராகவும் (சிந்தடி) வரும்.
அலகிடுதல்
செய்யுளின் சீரை அசை பிரித்து நேரசை, நிரையசை என்று பகுத்துக் காண்பதை முன் வகுப்பில் அறிந்துள்ளோம்.
அலகிடுதல் என்பது சீரைப் பிரித்து அசை பார்த்து, அசைக்கேற்ற வாய்பாடு காணுதல்.
அலகிடுதல்
எ.கா.
உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
வ.எண் | சீர் | அசை | வாய்பாடு |
1 | உல/கத்/தோ | நிரை நேர் நேர் | புளிமாங்காய் |
2 | டொட்/ட | நேர் நேர் | தேமா |
3 | வொழு/கல் | நிரை நேர் | புளிமா |
4 | பல/கற்/றும் | நிரை நேர் நேர் | புளிமாங்காய் |
5 | கல்/லார் | நேர் நேர் | தேமா |
6 | அறி/விலா | நிரை நிரை | கருவிளம் |
7 | தார் | நேர் | நாள் |