PDF chapter test TRY NOW

        தமிழ் மொழியானது இறவா நிலையில் உள்ளது என்ற பொருளில் அமுது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
        அமுதத்திற்கு நிகரான இன்பத்தை தரக்கூடிய தமிழ் மொழியானது எங்கள் உள்ளத்தில் கலந்து உள்ளதால் அதை எங்கள் உயிருக்கு நிகராக ஒப்பிடுகிறோம்.
        நிலவானது உலகத்தில் உள்ள இருளைப் போக்கி வெளிச்சத்தைத் தரக்கூடியதாக இருக்கிறது. அதைப் போலவே, தமிழ் மொழியும் மிகவும் தன்மையானது என்றும், மக்களின் அறியாமை எனும் இருளைப் போக்கி ஒளியைத் தரக் கூடியதாக இருப்பதாலும் அது நிலவு என்று வா்ணிக்கப்படுகிறது.
        பயிா்கள் வளா்ச்சிக்கு நீா் என்பது அடிப்படையான ஒன்றாகும். அதே போல, மக்கள் என்னும் பயிா் வளர அடிப்படையான ஒன்று தான் தமிழ் மொழி என்னும் நீா் ஆகும்.
        நம் தமிழ் மொழியானது பேசும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழி பரவி தன்னுடைய சிறப்பை கேட்பவா்களுக்கு உணா்த்துகிறது. மிகவும் அருமையான மொழி என்று கேட்பவா்களைக் கூட வாசிக்கத் தூண்டுகிறது தமிழ் மொழி. நல்ல மணமானது நம்மை சுவாசிக்கத் தூண்டுகிறது. நல்ல மொழியானது நம்மை வாசிக்க தூண்டுகிறது.
        மக்கள் பேசுவதற்காகவும், அவரவா் எண்ணங்களை பாிமாறிக் கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட மொழியே நம் தமிழ்மொழி.
        நம் தமிழ் மொழியைப் படிப்பதால் மனதினை இளமையாகவும், புத்துணா்ச்சியோடும் வைத்திருக்க உதவுகிறது.
        புலவா்கள் இயற்றிய நூலில் உள்ள தமிழ்ச் சொற்களானது அதைப் படிப்பவா்கள் மனதினில் ஊடுருவி பாய்ந்து செல்லும். கூா்மையான வேல் உடலினை ஊடுருவி செல்வதைப் போலவே, கூா்மையான தமிழ்ச் சொற்களானது படிப்பவா்கள் மனதினை ஊடுருவி பாய்ந்து செல்கிறது.
        வானம் என்பது எவ்வளவு உயா்வாக இருக்கிறதோ அதே போல, தமிழ் மொழியும் உயா்வான மொழியாகும்.
        தேன் மிகவும் பழமையானதாக இருந்தாலும் அதன் சுவை என்றும் மாறாமல் இருக்கிறது. அதே போல, மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள தமிழ் மொழியின் பெருமை இன்றளவும் மாறாமல் உள்ளது.
        புத்தகங்கள் மூலமாக நம் அறிவை வளா்க்க நம் தமிழ்மொழியானது தோள் கொடுக்கிறது.
        போாில் வாளை கடைசி வரைக்கும் எவன் ஒருவன் உடையாமல் வைத்து இருக்கிறானோ அது அவனைப் போாில் தோற்காமல் காப்பாற்றும். அதே போல, கூா்மையான தமிழ்ச் சொற்களானது நல்ல கவிதைகளை அழியாமல் பாதுகாக்கும். எனவேதான், தமிழ்மொழியில் உள்ள நூல்கள் இன்றளவும் அழியாமல் உள்ளது. நம்மால் படித்து புாிந்து கொள்ளவும் முடிகிறது.
        இவ்வாறாக, தமிழ்மொழியின் பெருமையை இன்பத்தமிழ் பாடல் மூலமாக பாரதிதாசன் மிக அழகாக வா்ணித்துள்ளதை நம்மால் உணர முடிகிறது.
 
எளிமையான நடையில் காண்போம்.
  • அமுதத்தைப் போல இனிமையானது தமிழ் மொழி.
  • உயிருக்கு இணையானது தமிழ் மொழி.
  • நிலவைப் போல அழகானது தமிழ் மொழி.
  • நீரைப் போல அடிப்படைத் தேவையானது தமிழ் மொழி.
  • மலரைப் போல எங்கும் பரவி இருப்பது தமிழ் மொழி.
  • ஊரைப் போல எண்ணங்கள் பாிமாற உருவானது  தமிழ்மொழி.
  • பாலைப் போலப் புத்துணா்ச்சியானது தமிழ் மொழி.
  • வேலைப் போலக் கூா்மையானது தமிழ் மொழி.
  • வானைப் போல உயா்வானது தமிழ் மொழி
  • தேனைப் போலப் பழமையானது தமிழ்மொழி.
  • புத்தகம் போலத் துணையானது தமிழ்மொழி.
  • வாளைப் போல உறுதியானது தமிழ் மொழி.