PDF chapter test TRY NOW
மனித இனப் பரிணாம வளர்ச்சியின் சிறப்புகளுள் ஒன்று மொழி. மனிதரைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது மொழி. மொழி, நாம் சிந்திக்க உதவுகிறது. சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுகிறது. பிறர் கருத்தை நாம் அறிய உதவுவதும் மொழியே. உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இவற்றுள் சில மொழிகள் மட்டுமே பேச்சு வடிவம், எழுத்து வடிவம் ஆகிய இரண்டையும் பெற்றுள்ளன.
உலக மொழிகளுள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே. அவற்றுள் செம்மை மிக்க மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டவை சில மொழிகளே. தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும்.
தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை. பல மொழிகள் கற்ற கவிஞர் பாரதியார்,
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்
என்று தமிழ்மொழியின் இனிமையை வியந்து பாடுகிறார்.
- மனிதர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த மொழி அவசியம் தேவை. மொழியின் துணைகொண்டுந்தான் நம்மால் சிந்திக்க, செயல்பட முடிகிறது.
- மனிதரைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது மொழி. பிற உயிரினங்களால் கருத்தை வெளிபடுத்த முதியாது.
- உலகில் செம்மொழியாக கருதப்படும் மொழிகள் மொத்தம் 8 ஆகும்.
- கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், பாரசீகம், அரபு, எபிரேயம், சீனம் மற்றும் தமிழ்.
- செம்மொழியாக ஒரு மொழி அறிவிக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு சில தகுதிகள் தேவைப்படுகின்றன.
- மேலும், அம்மொழியானது தொன்மையானதாகவும், வளமையானதாகவும், இலக்கிய வளம் பெற்றதாகவும் இருக்க வேண்டும்.
- அவ்வகையில் தமிழ்மொழியானது எல்லாத் தகுதிகளையும் பெற்று உள்ளது.
- பெரும்பாலான செம்மொழிகள் வழக்கில் இருந்து நீங்கி விட்டன. அவை பேச்சு வழக்கில் கூட இல்லை.
- ஆனால், தமிழ்மொழியின் பண்பாடு, சிறப்பு அழியாமல் இன்றளவும் காக்கப்பட்டு வருகின்றன.
- இதற்கு முக்கிய காரணம் தமிழ் மொழியின் கட்டமைப்பு ஆகும்.
- தமிழை புலவா்களும், மன்னா்களும் வளா்த்தாலும் அவா்கள் மறைந்த போதிலும் தமிழ் மொழி இன்னும் காப்பற்றப்பட்டு வருகிறது.
- பொதுவாக செம்மொழி தகுதி பெறுவதற்கு 11 கூறுகள் உள்ளது.
Important!
- தொன்மை
- தனித்தன்மை
- பொதுமைப்பண்பு
- நடுவு நிலைமை
- தாய்மைப் பண்பு
- கலைபண்பாட்டுத் தன்மை
- தனித்து இயங்கும் தன்மை
- இலக்கண, இலக்கிய வளம்
- கலை இலக்கியத்தன்மை
- உயா்சிந்தனை
- மொழிக் கோட்பாடு
- மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பண்புகளும் தமிழுக்கு உண்டு.
- இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக திருக்குறள் உள்ளது.
- இதன் வாயிலாக தொன்மைச் சிறப்பு வாய்ந்தது தமிழ் என்பதை உணர முடிகிறது.
- செம்மொழித் தன்மைகள் அனைத்தும் உள்ளதாக தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன. இதன் மூலமாகவும் தமிழ் செம்மொழி தன்மை உடையது என்பதை அறியலாம்.
- தமிழ் செம்மொழி என உணா்ந்திய தமிழறிஞா்களுள் குறிப்பிடத்தக்கவா்கள். பாிதிமால், கலைஞா், பாவாணா், காா்டுவெல் போன்ற பலா் ஆவா். இவ்வகையில் பல அறிஞா்கள் தமிழின் செம்மொழித் தன்மையை உலகிற்கு எடுத்துரைத்துள்ளனா்.
- இந்த செயல்பாட்டினால் தமிழ் இப்பொது செம்மொழியாகத் திகழ்கிறது.
தேசிய கீதங்கள் என்னும் தலைப்பில் கவிஞர் பாரதியார் குறிப்பிடுகிறார்;
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்.
இனிதாவது எங்கும் காணோம்.
தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி, சமஸ்கிருதம், குச்சி, பிரஞ்சு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாகப் புலமை பெற்றவர் பாரதியார் மற்றும் பிற மொழிகளின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். இந்த பாடலில் நான் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிமையான மொழி எங்கும் இல்லை என்கிறார்.