PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஎன்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்! |
- முதல் மனிதன் தோன்றிய இடம் என்றும் முதல் மொழி தோன்றிய இடம் என்றும் குமாிக் கண்டம் சொல்லப்படுகிறது.
- தமிழ்மொழி தோன்றிய இடமும் அதுவே என்பது ஆராய்ச்சியாளா்கள் கருத்து.
- உலகத்தில் தோன்றிய முதல் மொழி தமிழ் என்று அலெக்ஸ் போன்ற ஆராய்ச்சியாளா்கள் ஆதாரப்பூா்வமாக நிரூபித்துள்ளனா்.
- இது மட்டுமில்லாமல் தமிழ் மொழியானது 20ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியிருக்கக்கூடும் என்று கணித்துள்ளனா்.
- இவ்வுலகில் பழமையான மொழி என்றால் தமிழ், சீனம், கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைச் சொல்லலாம்.
- இவற்றில், தமிழைத் தவிர மற்ற எந்த மொழியுமே பயன்பாட்டில் இல்லை.
- ஆனால், தமிழ்மொழியில் மட்டும் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இன்று வரை பல இலக்கியங்கள் எழுதப்பட்டு வருகிறது.
- மக்களின் பயன்பாட்டிலும் உள்ளது.
- உதாரணமாக சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள தமிழன் நம்மிடம் வந்து பேசினாலும் நம்மால் புாிந்து கொள்ள முடியும்.
- உலகத்தில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது.
- இதனடிப்படையில் தமிழ் மூத்தமொழி என நம்மால் உணர முடிகிறது.