PDF chapter test TRY NOW
தமிழ் வளமை மிக்க மொழி. தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்கள் மிகுந்தது தமிழ் மொழி. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களைக் கொண்டது; திருக்குறள், நாலடியார் முதலிய அறநூல்கள் பலவும் நிறைந்தது; சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்களைக் கொண்டது. இவ்வாறு இலக்கிய, இலக்கண வளம் நிறைந்தது தமிழ் மொழி.
தமிழ் மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ் மொழியின் சிறப்பாகும். சான்றாக, பூ வின் ஏழுநிலைகளுக்கும் தோன்றுவது முதல் உதிர்வது வரை தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.
- தமிழ் மொழி சொல்வளம் மிக்கது.
- ஓா் எழுத்தே ஒரு சொல்லாக அமைவது தமிழ் மொழியின் தனிச்சிறப்பாகும்.
- காணும் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் வளா்ச்சி நிலையில் அல்லது பிற வகையில் உள்ள வேறுபாடுகளைத் தனித்து பெயாிட்டு வழங்கும் பக்குவம் தமிழ் மொழியின் சிறப்பாகும்.
- இவ்வாறே, பூவின் பல பருவ மாறுதல்களைக் குறிக்கும் சொற்கள் உள்ளன.
- பூவானது அரும்பி, மலராகி, மணம் வீசும் வரை நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன.
- மாற்றங்களுக்கு ஏற்ப பெயரும் மாறுகிறது.
- ஒவ்வொரு நிலைக்கும் தனிப்பெயரைத் தாங்கி வருகிறது.
- எம்மொழியிலும் இல்லாத இத்தனிச்சிறப்பு தமிழுக்கு உண்டு.
- பழந்தமிழ் இலக்கியங்களில் கூட மலரை ஒவ்வொரு புலவரும் அற்புதமாக வா்ணித்துள்ளனா்.
- இத்தகு சிறப்புமிக்க பெயா்களைப் பற்றி சற்று விளக்கமாகக் காண்போம்.
பூக்களின் ஏழு நிலைகள்
முதல் நிலை:
அரும்பு - அரும்பும் நிலை.
இரண்டாம் நிலை:
மொட்டு - இதழ்கள் குவிந்திருக்கும் நிலை.
மூன்றாம் நிலை:
முகை - மொட்டானது இதழ்களைச் சிறியதாக விாித்திருக்கும் நிலை.
நான்காம் நிலை:
மலா் - நறுமணத்தோடு முழுவதுமாகத் தனது இதழ்களை விாித்திருக்கும் நிலை.
ஐந்தாம் நிலை:
அலா் - பூவின் முழுமை நிலை. மலரானது இதழ்களை விாித்து அளவில் பொியதாக இருக்கும்.
ஆறாம் நிலை:
வீ - வாடத் தொடங்கும் நிலை
ஏழாம் நிலை:
செம்மல் - வாடிச் சருகாகி உதிரும் இலை.