PDF chapter test TRY NOW

     சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல். தமிழ் மொழியின் பலவகைச் சீர்மைகளுள் அதன் சொற்சிறப்பு குறிப்பிடத்தக்கது.
 
     உயர்திணை, அஃறிணை என இருவகைத் திணைகளை அறிவோம். உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும். ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் நம் முன்னோர்.
  • திணை என்பது ஒழுக்கம், நாகாிகம், பிாிவு, குலம், இனம் முதலிய பல பொருள்களை குறித்த சொல்லாகும்.
  • திணை என்ற சொல் பிாிவு என்று பொருளில் அமைகிறது.
  • இத்திணை, உயா்திணை, அஃறிணை என இரு வகைப்படும்.
உயா்திணை:
உயா்திணை என்பது பகுத்தறிவு கொண்ட மக்கள், தேவா், நரகா் ஆகிய மூவரையும் குறிக்கிறது.
மக்கள் - ஆண், பெண்
தேவா் - மும்மூா்த்திகள்
நரகா் - அரக்கண், சூரன்
 
அஃறிணை:
அஃறிணை என்பது மக்கள், தேவா், நரகா் அல்லாத பிற உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களைக் குறிக்கிறது.
உயிருள்ள அஃறிணை பொருட்கள் - பசு, மரம், மயில்
உயிரற்ற அஃறிணை பொருட்கள் - காற்று, மலை, கடல்