PDF chapter test TRY NOW

இடம் : மதுரை

நாள் : 12-05-2017

அன்புள்ள அத்தைக்கு, 

வணக்கம். நான்நலம். நீங்கள் நலமா? என் பள்ளிப் பருவக் கனவு நனவாகி விட்டது. ஆம் அத்தை. இளம் அறிவியல் ஆய்வாளர் பணிக்கு நான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன். நாளை காலை சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேரவேண்டும். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உங்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். நான் ஆறாம் வகுப்பு படித்தபோது உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேனே! நினைவிருக்கிறதா?

அதன் பிறகு நீங்கள் எனக்குத் தொடர்ந்து பல கடிதங்கள் எழுதினீர்கள். செய்திகள் பலவற்றைக் கூறி ஊக்கம் அளித்துக்கொண்டே இருந்தீர்கள். என் ஐயங்கள் எல்லாவற்றையும் தீர்த்து வைத்தீர்கள். என் கனவுகளுக்கு உரம் ஊட்டியவை உங்களின் கடிதங்களே! அக்கடிதங்களை அறிவுக் கருவூலங்களாக இன்றும் பாதுகாத்து வருகிறேன். என்னுடைய உயர்வுக்குக் காரணமான அவற்றை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது.

கனவு பலித்தது பாட பொருண்மையானது கடிதப் போக்குவரத்தின் வாயிலாக, நிகழ் காலத்தில் கடந்த கால கடிதப் போக்குவரத்தினை நினைவுகூா்ந்து பின் மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தடைவது போலக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

 
          இங்கு கதைக்குள் கதைபோலக் கடிதத்திற்குள் கடிதம் இடம்பெற்றுள்ள உத்திமுறையை நாம் நோக்க வேண்டும்.
 
shutterstock_451837552.jpg
 
          கடிதத்திற்குள் 12 மே 2017இல் மதுரை நிகழ்காலத்திலும் கடந்த காலம் 04 மாா்ச் 2006இல் நறுமுகை சென்னையிலிருந்தும் எழுதுவதாகத் தரப்பட்டுள்ளது. கால இடைவெளி பதினொன்று ஆண்டுகள்.
 
          ஆறாம் வகுப்பில் படிக்கக் கூடிய தங்களுக்கு, ஆறாம் வகுப்பில் படிக்கும் 11 வயது கொண்ட இன்சுவைக்கு அறிவியல் அறிஞராகக் கனவு காண்பதாகக் கூறப்படுகிறது.
  
1555073263.svg
 
          11 ஆண்டுகள் கடந்து இக்கனவு நிறைவேறுவதாகப் பதிவு செய்யும் பொருத்தப்பாட்டை நாம் கவனிக்க வேண்டும். இன்சுவை 12 மே 2017 அன்று எழுதப்பட்ட கடிதத்தில் நாளை காலை சதீஷ்வான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேரப் போவதாக எழுதுகிறாள்.
 
பெட்டிச் செய்திகள்:
  
இந்திய விண்வெளி ஆய்வு மையம்:
  • இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஹாிக்கோட்டா.
  • இங்குதான் இந்தியாவின் ஒரே விண்கல ஏவு நிலையமான சதீஷ்தவான் விண்வெளி மையம் உள்ளது.
  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் தன் விண்கலங்களை இங்கிருந்துதான் ஏவுகிறது.
  • 2008 அக்டோபா் 22 சந்திராயன் 1 ஏவப்பட்டதும் இங்குதான்.
        
       இன்சுவையின் அத்தை (நறுமுகை) ஓர் அறிவியல் அறிஞர். ஆதலால்தான் அவள் அவளது அத்தை போல ஆகவேண்டும் என்னும் எண்ணம் எழுகிறது. இதற்கு, தமிழ்வழிக் கல்வி தடையாக இருக்குமோ என்று ஐயம் ஏற்பட்டுக் கடிதம் எழுதுகிறாள். 
       தனது ஆறாம் வகுப்பு படிக்கும் பருவத்திலேயே கடிதம் எழுதுகிறாள். கடிதம் எழுதும் வழக்கம் வழக்கில் உள்ளது என்பதை நாம் அறிகிறோம். அதே தருணத்தில், தொழில்நுட்பத்திற்கு ஆட்படாத மாணவியாகவும், குறிப்பாகக் கடிதம் எழுதத் தெரிந்த ஆறாம் வகுப்பு மாணவியாகவும் திகழ்கிறாள் என்பது குறிக்கத்தக்கது.
 
பெட்டிச் செய்திகள்:
 
கனவு பலித்ததும் கடித போக்குவரத்தும்:
  • தகவல்தொடர்பு இதில் “தகவல்” மற்றும் “தொடர்பு” என்னும் இரண்டு சொற்கள் உள்ளன.
  • தகவல் என்பது மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தெரியப்படுத்துவது.
  • தொடர்பு என்பது இரு இடங்களை இணைப்பது.
  • தகவல் தொடர்பு என்பது ஓர் இடத்திலிருந்து தூரத்தில் இருக்கும் மற்றொரு இடத்தோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்துவது.
  • ஆக, இரண்டு இடங்களை இணைத்து, அங்குள்ளவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வெளிப்படுத்துவது.
  • இதற்கான கருவிகளுக்குத்தான் தகவல் தொடர்பு என்னும் தொழில்நுட்பச் சொல்லாடலை நாம் பயன்படுத்துகிறோம்.
  • ஓவியங்கள், ஒலி, படவடிவம், தோல் கருவிகள், உயிரினங்கள் (புறா, கிளி), ஒற்றர்கள் (மனிதர்கள்), தூதுவர்கள் (மனிதர்கள்), கடிதங்கள், அச்சுத்துறை, மின்சாரம் தந்த அறிவியல் கருவிகள், வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, தொலைக்கருவிகள், கணினி, மற்றும் இணையம் என்பவைத் தகவல்தொடர்புக்கு உறுதியாக நிற்கும் பயன்பாட்டுக் கருவிகள்.
  • இத்தகவல் தொடர்பில் நீண்ட நெடிய காலம் நம் தொடர்பில் இருந்த ஒன்று கடிதம். கால மாற்றத்தில், வளர்ச்சியில் அதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
  • ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் முதன்முதலாக
    1764-1766களில் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் கடித முறைக்கான துறையாக அஞ்சல் துறைச் சேவையைத் துவக்கியது.
  • கவர்ன வாரன் காஸ்டிங் அஞ்சல் சேவையைப் பொது மக்களுக்காகவும் ஆக்கினார்.
  • மக்கள் கடித வழி போக்குவரத்தில் ஈடுபட்டனர். இப்போக்குவரத்தில் அஞ்சல் குறியீட்டு எண்கள் தமது குடும்ப உறுப்பினர்களைப் போல அறிந்து வைத்திருந்தனர்.
  • எழுத்தாளர் முனைவர்வெ.இறையன்பு  அவர்கள், கடிதம் என்பது சிறகு முளைத்த பந்து; இறகு முளைத்த இதயம். அப்பாவிடம் இருந்து வந்தால் பற்று, விருப்பமானவரிடம் இருந்து வந்தால் கிளுகிளுப்பு, நண்பனிடம் இருந்து வந்தால் எதிர்பார்ப்பு, அதிகாரியிடம் இருந்து வந்தால் பதற்றம் என்று உறையைப் பார்த்ததும் உடம்பு முழுவதும் உணர்ச்சி கொந்தளிக்கும். கடிதத்தால் வாழ்க்கை மாறிப்போனதாக காவியங்களும், திரைப்படங்களும் வெளிவந்த காலம் உண்டு. மதமான வேலைவாய்ப்புக் கடிதத்தால் நிலைகுலைந்த இளைஞன், தவறிப் போன காதல் கடிதத்தால் தலைகுனிந்த காதலர்கள், அநாமதேயமாக வந்த புகார்க் கடிதத்தால் அவமானப்பட்ட அபலைகள் என புனைவு இலக்கியத்தில் பல நிகழ்வுகளுக்குக் கடிதம் காரணமாக கற்பிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. முகவரி மாறியதால் வாழ்வே திசை திரும்பியதாக படைக்கப்பட்ட புதினங்களும் உண்டு. கடித இலக்கியம் என்கிற புனைவும் இருந்தது என்று பதிவு செய்கிறார்.
  • ஆக, தமிழ் இலக்கியத்தில் கடிதம் எழுதும் முறையில் இலக்கியங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.
  • முக்கிய சில ஆகப்பெரும் ஆளுமைகள் கடிதத்தின் வாயிலாகச் செய்தியை தெரிவித்து இருவருக்குமான தொடர்பை வலுப்படுத்தினர். அதனடிப்படையில்,
  1. பண்டித ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திராகாந்திக்கு 42 ஆண்டுகள் (1922 முதல் 1964 வரை) தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளார்.
  2. மகாத்மா காந்தியடிகள் 1917ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது  கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை, மாணவர்களுக்கு ஏற்ற வாடிவமான கடித வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
  3. முனைவர் மு.வரதராசன் அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என நான்கு கடித இல்லக்கிய நூல்களை எழுதியுள்ளார். மு.வ.வின் பிற நூல்களுக்கான திறவுகோல் அவர்தம் கடித இலக்கியங்களே என்பார்.
  4. அறிஞர் அண்ணா “திராவிட நாடு” என்னும் இதழில் கடிதங்களைத் “தம்பிக்கு” என்று ஏராளமாக எழுதியுள்ளார்.
  5. எழுத்தாளர் ஆனந்தரங்கர் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் போற்றப் பெற்றது.
  • தகவல்தொடர்பில் சிறப்புமிக்க ஒன்றாகக் கடிதப் போக்குவரத்தை நமது முன்னோர்கள் கருதி இருக்கின்றனர்.
  • தகவல்தொழில் நுட்ப அசு வளா்ச்சியில் இளைய தலைமுறையினாிடம் சமூக ஊடகங்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளதால் கடிதம் எழுவதும் வழக்கம் முற்றிலும் இல்லாமல் போனது வருத்தத்திற்குாிய பதிவு.
  • இதனடிப்படையில் வரலாற்றுச் சிறப்புமிகு கடிதப் போக்குவரத்தில்  "கனவு பலித்தது" என்னும் விரிவானம் தமிழ்மொழியில் அறிவியல் மனப்பான்மை சார்ந்த கருத்துகளையும், கனவுகளையும் மாணவர்களிடம் கொண்டு சேர்த்துள்ளனா் எனலாம்.

 

     அவள் எழுதிய கடிதத்திற்கு மறுமடலைத் தொடர்ந்து பல்வேறு கடிதங்களை எழுதுகிறாள் அத்தை நறுமுகை. இக்கடிதங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அதனை வாசித்து வாசித்து தன்னை வளர்த்துக் கொள்கிறாள். அவளது வளர்ச்சிக்கு கடுமையான உழைப்பும் அத்தையின் கடிதங்களும் தான்.

Reference:

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திருத்திய பதிப்பு(2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். மொழி - கனவுபலித்தது (ப.எண்.15-17) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.