PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இடம்: சென்னை
நாள்: 04-03-2006
அன்புள்ள இன்சுவை,
          இங்கு நான் நலமாக இருக்கிறேன். உன் கடிதம் கிடைத்தது. ஆறாம் வகுப்பிலேயே எதிர்கால இலக்கினை நீ உருவாக்கிக் கொண்டு விட்டாய். மகிழ்ச்சி! தமிழில் படித்தால் சாதிக்க முடியாது என்பது தவறான எண்ணம். சாதனையாளர்கள் பலரும் தங்கள் தாய்மொழியில் படித்தவர்களே! சாதனைக்கு மொழி ஒரு தடையே இல்லை.
     நீண்ட நெடுங்காலமாகவே அறிவியல் சிந்தனைகளோடு விளங்கியவர்கள் தமிழர்கள். தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை உன்னுடன் பகிர நினைக்கிறேன்.         
       அறிவியல் துறையில் சாதித்தவர்களும், பிற துறைகளில் தடம் பதித்தவர்களும் தமிழ்வழியில் கல்வி கற்றவர்களே.
       நீண்ட நெடிய தமிழ் வரலாற்றில் தமிழ் இலக்கண இலக்கியங்களில் அறிவியல் கூறுகள் இடம்பெற்றுள்ளன.
      தமிழில் படித்தால் சாதிக்க முடியாது என்பது தவறான எண்ணம். சாதனையாளர்கள் பலரும் தங்கள் தாய்மொழியில் படித்தவர்கள். மொழி ஒரு தடையே இல்லை.
      நீண்ட நெடுங்காலமாகவே அறிவியல் சிந்தனைகளோடு விளங்கியவர்கள் தமிழர்கள். தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் பல காணப்படுகின்றன.
.
பெட்டிச் செய்திகள்:
 
Abdulkalam.jpg
  
பெயர்           : ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்.
பிறப்பிடம்  :  ராமேஸ்வரம், தமிழ்நாடு.
கல்வி            : தமிழ்நாடு அரசுப் பள்ளி தமிழ் வழியில் கல்வி பயின்றார். 1960ஆம் ஆண்டு புது டெல்லி DRDO – Defence Research
முனைவர் பட்ட ஆய்வு : 2006ஆம் ஆண்டு ஐ.ஐ.டி மும்பையில் பி.எச்டி பட்டத்தை நிறைவு செய்தார்.
பணி அனுபவம் :  
  • வானூர்தி  அபிவிருத்தி அமைத்தல் பிரிவு(Development Organisation ). 
  •  1969ஆம் ஆண்டு (ISRO- Indian Space Research Organisation) இந்திய விண்வெளி ஆய்வு மையப் பணி.
  • ISROவில் [SLV -III] என்ற செயற்கைகோளினை விண்ணிற்கு ஏவும் ஒரு ராக்கெட்டினை வடிவமைக்கும்   குழுவிற்குத் தலைவர்.
  • 2002ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் 2007 வரை 5 ஆண்டுகள் வரை குடியரசுத் தலைவர் பதவி.
எழுதிய நூல்கள் :  அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை.
   
 
ISRO-K.-Shivan_20200625__530_880.jpg
பெயர்          :  டாக்டர் கை.சிவன் (இஸ்ரோ நிறுவனத்தின் ஒன்பதாவது தலைவர்.)
பிறப்பிடம் :  கன்னியாகுமரி - சரக்கல்விளை கிராமம்.
கல்வி           :  தமிழ்நாடு அரசுப் பள்ளி தமிழ் வழியில் கல்வி பயின்றார்.
முனைவர் பட்ட ஆய்வு : 2006ஆம் ஆண்டு ஐ.ஐ.டி மும்பையில் பி.எச்டி பட்டத்தை நிறைவு செய்தார்.
பணி அனுபவம் :
  • 1982இல் இஸ்ரோவில் சேர்ந்தார். திருவனந்தபுரம் - விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர். 
  • விண்வெளித் துறை செயலாளர். 
  • விண்வெளி ஆணையத்தின் தலைவர்.  
பங்களிப்பு : பி.எஸ்.எல்.வி திட்டத்தில் முக்கியப் பங்கு. திட்டமிடல், வடிவமைப்பு, ஒருங்கிணைத்தல், ஆய்வு போன்றவற்றில் சிறந்தவர்.
அனுபவம் : முப்பதாண்டு காலம் – ஜி.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி மார்க் 3, ஜி.எஸ். எல்.வி ராக்கெட்டின் திட்ட இயக்குனராக இருந்தார்.
 
 
Mayilsamy.jpg
  
பெயர்          :  மயில்சாமி அண்ணாதுரை
பிறப்பிடம் :  கோதவாடி கிராமம் (பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்)
கல்வி           :  தமிழ்நாடு அரசுப் பள்ளி தமிழ் வழியில் கல்வி பயின்றார்.
பணி அனுபவம் :
  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர். 
  • இச்சமயத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிய சாதனையாளர்களுள் இவரும் ஒருவர்.
  • தற்போது, தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர், 
  • தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவர்.
  • முதன்முதலில் இந்தியா நிலவுக்கு அனுப்பிய ஆய்வுக்கலம் சந்திராயன்-1 இதன் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார்.
முனைவர் பட்டம் : ஐந்து முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
பரிசுகள் : ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளார்.
Reference:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திருத்திய பதிப்பு(2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம்.
மொழி - கனவுபலித்தது (ப.எண்.15-17) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.
புகைப்பட உபயம் -PTI- https://www.outlookindia.com/photos/people/K-Sivan/17704?photo-232561
https://commons.wikimedia.org/wiki/File:Graduation_of_churchil_jerin_in_BE.jpg
https://www.flickr.com/photos/sfupamr/6878515034