PDF chapter test TRY NOW

      போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. 

சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியும் நற்றிணை என்னும் நூலில் காணப்படுகிறது. முற்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள அறுவை மருத்துவத்துக்கான  இன்றைய கூறுகள் வியப்பளிக்கின்றன அல்லவா?

    தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம்பெற்றுள்ளது.

    தற்காலத்தில் அறிவியல் துறையில் மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலும் தமிழர்கள் கோலோச்சி வருகிறார்கள்.

   சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்துகொள். நமது ஊர் நூலகம் உனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நூல் வாசிப்பு உன் சிந்தனைக்கு வளம் சேர்க்கும். அறிவியல் மனப்பான்மை பெருகும்.

   தமிழாலும் தமிழராலும் எந்தத் துறையிலும் எதையும் சாதிக்க முடியும். தொடர்ந்து முயற்சி செய். நீ வெல்வாய்! கனவு நனவாக வாழ்த்துகிறேன்.

அன்புடன் உன் அத்தை,

நறுமுகை.

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் 

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.  

- தொல்காப்பியம்

 

கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி…

- கார்நாற்பது

 

நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு.

- பதிற்றுப்பத்து

 

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்

- நற்றிணை

 

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட 

பனையளவு காட்டும்.

- திருவள்ளுவமாலை

 

    நீங்கள் கூறியபடி நூல்கள் பலவற்றையும் தொடர்ந்து படித்து வந்தேன். உங்கள் அன்பு என்எண்ணம் நிறைவேற உறுதுணையாக விளங்கியது. தமிழ் இலக்கியங்களும் பிறநூல்களும் எனக்கு நம்பிக்கை ஊட்டின. இவற்றை நான் என்றும் மறக்க மாட்டேன். சமுதாயத்திற்கு என்னால் இயன்ற நன்மைகளைச் செய்வேன். அதற்கேற்பப் பணியாற்றுவேன். நன்றி அத்தை. 

அன்புடன், 

       இன்சுவை.

     பதிற்றுப்பத்து, நற்றிணை ஆகிய நூல்கள் அறுவை மருத்துவச் செய்தியை நமக்கு அளிக்கின்றன.
     போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
     சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியும் நற்றிணை என்னும் நூலில் காணப்படுகிறது.
     தூரத்தில் உள்ள பொருளை, உருவத்தை அருகாமையில் காட்டச் செய்ய இயலும் என்பது அறிவியல் விஞ்ஞானி கலிலீயோவின் கூற்று. இக்கூற்றைக் கபிலர் தான் எழுதிய திருவள்ளுவமாலையில் குறிப்பிட்டுள்ளார் என்பது நோக்கத்தக்கது.

    சாதனையாளர்களை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு நூலகத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள ஏராளமான நூல்களை வாசித்துச் சுய சிந்தனையைப் பெருக்கினால் இயல்பாகவே அறிவியல் மனப்பான்மை வளரும்.

 

 

    தமிழாலும் தமிழராலும் அனைத்துத் துறையிலும் வெற்றி பெற முடியும். நீயும் வெற்றி பெறுவாய். உனது கனவு நனவாகும் என்று கடிதம் மூலம் கூறியதை மீண்டும் நினைவுபடுத்துகிறாள். இந்நினைவூட்டல் கடிதம் கடிதத்திற்குள் கடிதமாகக் காட்சியளிக்கிறது.

 

shutterstock_451837552.jpg

 

 

    இறுதி முடிப்பாக, அத்தை கூறியபடி பல நூல்களையும் இலக்கியங்களையும் வாசித்தது மட்டுமல்லாமல் அத்தையின் அன்பும்தான் நான் வெற்றியடைய காரணம் என்று நன்றி உணர்வோடு கூறுகிறாள்.

 

     இச்சமூகத்திற்கு இயன்ற நன்மைகளைச் செய்வதாக உறுதி கொள்ளும் வகையில் கடிதத்தை முடிக்கிறாள்.

 

 

Reference:

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திருத்திய பதிப்பு(2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். மொழி - கனவுபலித்தது (ப.எண்.15-17) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.