PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார் நாற்பது, திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.    

      திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற

அறிவியல் கருத்து

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்

நாழி முகவாது நால் நாழி. 

                                 என ஔவையார் பாடலில் கூறப்பட்டுள்ளது.

     கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின் அது மழை பொழியும் என்னும் அறிவியல் கருத்தை முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள்,

கார் நாற்பது, திருப்பாவை போன்ற இலக்கியங்கள் மூலம் அறிகிறோம்.

    நீர் (திரவ) பொருளை எவ்வளவு அழுத்தினாலும் அதன் அளவைச் சுருக்க முடியாது என்று ஔவையார் கூறுகிறார்.

  

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன். (வெண்பா எண் : 20)
- ஔவையாா்
இந்நூலின் பெயா் மூதுரை.
இதில், இடம்பெற்றுள்ள வெண்பா எண் - 20.
  
பொருள்:
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீா் நாழி முகவாது நால் நாழி -
  •  ஆழ்கடலில் ஒரு முகவையைக் (படியை) கொண்டு ஆழமாக அழுத்தி முகா்ந்தாலும் நான்கு படி நீரை முகர இயலாது. (ஒரு படியைக் கொண்டு ஒரு படி நீரைத் தான் முகர இயலும். நான்கு படி நீரை முகர இயலாது).
தோழி நிதியும் கணவனும் நோ்படினும் தத்தம் விதியின் பயனே பயன் -
  • அதுபோலத், தோழியே உனக்கு நற்கணவனும், மிக்க செல்வமும் கிடைத்தாலும், அவரவா் செய்த வினைக்கேற்ற பயனைக் காட்டிலும் அதிகமான பயனை அடைய மாட்டாா்கள்.
பெட்டிச் செய்திகள் :
  
ஔவையாாின் அறிவியல் சிந்தனைப்பாடல்:
  •  அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்பகட்டிக் குறுகத் தாித்த குறள், என்பது ஔவையாா் வாக்கு.
  • அணு (atom) என்னும் சொல்லை ஔவையாா் பயன்படுத்தியுள்ளாா்.
  • பொருளின் மிக நுண்ணியது அணு. இதை மேற்கொண்டு பிாிக்க அல்லது பிளக்க முடியாது. அப்படியான அணுவைத் துளைத்து என்று கூறுகிறாா்.
  • இருபதாம்  நூற்றாண்டில் அணுவைத் துளைத்த விஞ்ஞானி 'சா் எா்னஸ்ட் ரூதா்ஃபோா்டு'.
  • இவரது கண்டுபிடிப்பிற்கு முன்னே தமிழில் ஔவையாா் அணுவைத் துளைக்கும் செய்தியைக் குறிப்பி்டு அறிவியலின் முன்னோடிகளாகத் தமிழா்கள் சிந்தித்தவா்கள் என்பதை நிலைநிறுத்துகிறாா்.
  • ஔவையாா் எழுதிய நூல்களில் ஒன்று மூதுரை.
  • இதில், இடம்பெற்றுள்ள வெண்பா எண் - 20.
Reference:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திருத்திய பதிப்பு(2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். மொழி - கனவுபலித்தது (ப.எண்.15-17) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.