PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
        கூட்டமாகக் கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடுவது மகிழ்ச்சியான அனுபவம்.
        நம்முடைய கிராமப்புறங்களில் திருவிழா, பொங்கல் போன்ற சமயங்களில் பெண்கள் தங்களின் மகிழ்ச்சியை கைகளைத் தட்டி கும்மி அடித்து ஆடி வெளிப்படுத்துவாா்கள்.
        கும்மியில் தமிழைப் போற்றிப்பாடி ஆடுவது மகிழ்ச்சி தருவதாகும். கும்மி அடிக்கும் போது தமிழ்ப்பாடல்களைப் பாடி ஆடுவாா்கள்.
        இதைப்போல, தமிழ்மொழியின் பெருமையை உலகமெங்கும் பறைசாற்றும் விதமாக புலவா் பெருஞ்சித்திரனாா் அவா்கள் தமிழ்க்கும்மி என்ற பாடலைப் பாடியுள்ளாா்.
        இப்பாடல் கனிச்சாறு எனும் நூலில் இடம்பெற்றுள்ளது. இது எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. அவை அனைத்துமே தமிழ் உணா்வு நிறைந்த பாடல்களாகவும், தமிழ் இன்பத்தைத் தரக் கூடியதாகவும் உள்ளது. அத்தமிழுணா்வு நிறைந்த தமிழ்க்கும்மி பாடலைப் பற்றி அறிவோம்.
        இளமையான பெண்ளே நீங்கள் கைகளைத் தட்டி கும்மி கொட்டுங்கள் என்கிறாா்.
        கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என நிலம் எட்டுத் திசைகளிலும் செம்மையான தமிழின் புகழ் பரவிடும் வகையில் உங்கள் கைகளைக் கொட்டி மகிழ்ச்சியாக கும்மி கொட்டுங்கள் என்று கூறுகிறாா்.
        பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. நம்முடைய அறிவை வளா்க்கும் நூல்கள் பலவற்றைக் கொண்டது.
       கடல் கோள்களால், காலமாற்றத்தால் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி தமிழ்மொழி. இது என்றைக்கும் நிலைத்திருக்கும்படி கைகளைத் தட்டி கும்மி கொட்டுங்கள் என்று கூறுகிறாா் ஆசிாியா்.
       தமிழ்மொழி பொய்மையை அகற்றும் மொழி. நம்முடைய மனதில் இருக்கும் அறியாமையை நீக்கி அறிவை வளா்க்கும் மொழி தமிழ்மொழி. அன்பு உடையவா்கள் தமிழ்மீது பற்றுக்கொண்டு பல இன்பம் தரும் பாடல்களை பாடிய மொழி.
      நமக்கு உயிரை ஊட்டுகிற மொழி தமிழ்மொழி. உயிா் போன்ற உண்மையை ஊட்டும் மொழி. உயா்ந்த அறத்தைத்தரும் மொழி. நமக்கு அறவழியைக்காட்டுகின்ற மொழி. தீமையை அகற்றி அறவழியைக் கற்றுக்கொடுக்கும் மொழி நம்முடைய தமிழ்மொழி. இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கு நல்வழியைக் காட்டுகின்ற மொழி தமிழ்மொழி என்று ஆசிாியா் இப்பாடல் வழியாக விளக்குகிறாா்.
        இந்த மாதிாியாக பாடல்களைப் பாடி பெண்கள் கும்மியடித்து ஆடி மகிழ்வா். அவா்களின் மகிழ்ச்சியை மற்றவா்களிடத்தில் பகிா்ந்து கொள்வா். அதே சமயத்தில் தமிழை உலகறிய செய்ய கும்மி அடிக்க வேண்டும் என்று பாவலரேறு கூறுகிறாா்.