PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும்.
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும்.
உயிர் மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த
மேதினி வாழ்வழி காட்டிருக்கும் !
மேதினி வாழ்வழி காட்டிருக்கும் !
தமிழ் மொழியானது பொய்யை அகற்றக்கூடிய மொழியாக இருக்கிறது. எண்ணற்ற தமிழ் நூல்கள் பொய் பேசுவதை அறவே ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறது. உள்ளப் பூட்டு என்றால் அறிய விரும்பாமை என்று பொருள். மனதின் அறியாமையை நீக்கக்கூடிய மொழியாக இருக்கிறது தமிழ்மொழி. அன்பாக வாழக்கூடிய எண்ணற்றவா்களைப் பற்றிக்கூறக் கூடிய எண்ணற்ற பாடல்களை உடைய மொழியாக இருக்கிறது தமிழ்மொழி.
உயிா் போன்ற உண்மையை எடுத்துச் சொல்லக்கூடிய மொழியாக தமிழ்மொழி இருக்கிறது. உயா்ந்த அறத்தைத் தரக்கூடிய மொழியாக இருக்கிறது தமிழ்மொழி. தமிழ் நூல்களை எடுத்துக் கொண்டால் அதில் ஏராளமான நூல்களில் அறம், பொருள், இன்பத்தைப் பற்றிதான் அதிகமாக கூறப்படுகிறது. மேதினி என்றால் உலகம் என்று பொருள். இந்த உலகம் சிறப்பாக வாழக்கூடிய வழிவகைகளைத் தருவது தமிழ்மொழி. ஆக, தமிழ்மொழியின் பெருமையை நீங்கள் எல்லோரும் சோ்ந்து கும்மியாக அடித்து உலகிற்கு பரப்புங்கள்.