PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபெருஞ்சித்திரனாா்
இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது. பாடல் வாிகளுக்குச் சொந்தக்காரர் பெருஞ்சித்திரனாா். இவரைப் பற்றிக் காண்போம்.
பிறப்பு | 10.3.1933 |
பிறப்பிடம் | சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் |
இறப்பு | 11.6.1995 |
பணிகள் | கவிஞா், இதழாளா், இயக்கத்தலைவா் |
- தந்தை: துரைசாமி
- தாயாா்: குஞ்சம்மாள்
- “பாவலரேறு” என்று தேவநேயப் பாவாணரால் அழைக்கப்பட்டாா்.
- இயற்பெயா் ‘மாணிக்கம்’.
- பின்னர், தம் தந்தையின் பெயரினையும் இணைத்துத்
‘துரைமாணிக்கம்’ என்று வைத்துக்கொண்டார். - இவருக்கு, பல்வேறு புனைப்பெயா்கள் உண்டு.
- மெய்மைப்பித்தன், தாளாளன், அருணமணி, பாஉண்தும்பி, கெளனி ஆகியவையாகும்.
- அப்பெயா்களில் ஒன்றான பெருஞ்சித்திரன் என்பதே நிலையாகி விட்டது.
- உயா்நிலைப் பள்ளியில் படிக்கும் போது சேலம் நடேசனாரும், தமிழ் மறவா் பொன்னம்பலனாரும்
பாடம் கற்பித்தனா். - கல்லூாியில் படிக்கும் காலத்தில் இருந்தே பாவாணாின் நட்பும் பழக்கமும் ஏற்பட்டது.
- இத்தொடா்பானது பெருஞ்சித்திரனாரைத் தனித்தமிழ் இயக்கத்தின் அனைத்து செயல்பாடுகளிலும்
தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள உதவியது. - கல்லூாியில் படிக்கும் போதே இவா் குழந்தை, அருணமணி எனும் புனைப்பெயா்களில் மலா்க்காடு
எனும் கையெழுத்து இதழினை நடத்தியுள்ளாா். - இளம் வயதிலேயே பாரதிதாசன் மீதும் அவருடைய படைப்புகள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாா்.
பாவலரேறு பெருஞ்சித்திரனாா் மூன்று இதழ்களை நடத்தியுள்ளாா்.
- 1952 - தென்மொழி எனும் தனித்தமிழ் திங்களிதழ்.
- 1965 - தமிழ்ச்சிட்டு சிறுவா்களுக்கான கலை இதழ்.
- 1982 - தமிழ்நிலம் உலகத் தமிழின் முன்னேற்றக்கழக வார இதழ்.
பெருஞ்சித்திரனாா் தம் கருத்துக்களை இதழ்களின் வாயிலாகவே பெருமளவில் வெளிப்படுத்தினாா்.
படைப்புகள்:
- கனிச்சாறு
- கொய்யாக்கனி
- பாவியக்கொத்து
- நூறாசிரியம்
- அறுபருவத்திருக்கூத்து
- பள்ளிப்பறவைகள்
Reference:
https://www.newindianexpress.com/cities/chennai/2013/mar/09/pavalareru-was-determined-to-create-pure-tamil-literature-456995.html