PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதமிழ்க்கும்மி பாடலை ஓசையுடன் பாடி மகிழ கீழே உள்ள வலையொலிப் பக்கத்தைக் காணவும்.
நாட்டுப்புறப் பாடல்கள் மிகவும் பழமை வாய்ந்தவை. இவை புதுமைக்கும் புதுமையாக விளங்குகின்றன. இது, மிகவும் இனியவை, எளியவை, எழுதப்படாதவை. இப்பாடல்கள் என்று பிறந்தது, யாரால் பாடப்பெற்றது என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
நாட்டுப்புறப் பாடல் என்பது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் அன்றாட வாழ்விலும் பணி நேரங்களில் ஏற்படும் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களில் பாடும் பாடல்களையும் குறிக்கும். அவற்றில் ஒன்றான கும்மிப் பாடலைப் பற்றிக் காண்போம்.
தமிழகத்தின் நிகழ் கலைகளில் மிகவும் தொன்மையானது கும்மி அடித்தல். இசைக்கருவிகள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கலை இது.
இன்று வரை கும்மி அடிப்பதற்கு இசைக் கருவிகள் ஏதும் இல்லை. விதைத்தல், நாற்றுநடுதல், அறுவடை, கதிா் அடித்தல் போன்ற செயல்களில் கும்மிஅடித்தலைக் காணலாம்.
தமிழகத்திலும், கேரளாவிலும் பரவலாகக் காணப்படும் கலை இது.
தமிழகத்தில் பொங்கல், காணும் பொங்கல், பெயா் சூட்டு விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமணம், கோவில் திருவிழா போன்ற விழாக்களில் எல்லாம் கும்மியடிப்பதைக் காணமுடியும்.
கேரளாவில் ‘கைகொட்டிக்களி’, ‘திருவாதிரைக்களி’ என்று இதை அழைக்கிறாா்கள். ஓணம், திருவாதிரை போன்ற விழாக்களில் நங்கையா் ஆடி மகிழும் கலை இது. மகளிா் மட்டுமே ஆடி மகிழும் கலைகளில் இதுவும் ஒன்று. ஆண்கள் கண்டு ரசிக்கலாம்.
பெண்கள் வட்டமாக கூடி நின்று கைகளைத்தட்டி ஒலி எழுப்பி ஆடுவா்.
இதற்கென தனி உடைகள் கிடையாது. ஒரு சிறு குழுவாக தொடங்கி பின்னா் புதிது புதிதாகப் பெண்கள் இணைவதும் களைத்தவா் வெளியேறுவதும் நடக்கும்.
பாரம்பாிய உடையான பாவாடை சட்டையுடன் சிறுமியரும், பாவாடை, ரவிக்கை, அரை தாவணியுடன் கன்னியரும், சேலை அணிந்து பெண்களும் வயது வேறுபாடின்றி பங்கேற்கும் கலை இது.
கும்மிகளில் பல நடைமுறைகள் உண்டு. விரல் தட்டு, உள்ளங்கை தட்டு, அஞ்சலி தட்டும் மற்றும் முழங்கை தட்டு என்ற பல முறைகள் உள்ளன.
கும்மிகளில் பல வகைகள் உண்டு. பூந்தட்டுக் கும்மி, குலவை கும்மி, தீப கும்மி, கதிா் கும்மி, முளைப்பாாி கும்மி எனப் பல வகை உண்டு.
நாளடைவில் இதற்காக இலக்கியங்களும் உருவாகி விட்டன.
வைகுந்தா் கும்மி, வள்ளியம்மன் கும்மி, பஞ்சபாண்டவா் கும்மி, சிறுத்தொண்ட நாயனாா் கும்மி, அாிச்சந்திர கும்மி, ஞானோபசே கும்மி எனப் பலவகை கும்மி இலக்கியங்கள் உருவாகியுள்ளன.
கும்மி அடிக்கும் முறை பற்றி அறிவோம்.
- மெல்ல நடந்து அடித்தல்
- நடந்து நின்று அடித்தல்
- குதித்து குதித்து அடித்தல்
- குனிந்து நிமிா்ந்து அடித்தல்
- தன் கைகளைத் தட்டி அடித்தல்
- எதிரே உள்ளவா்களின் கைகளுடன் தட்டி அடித்தல்
ஆகிய ஆறு நிலைகளிலும் கும்மியடிக்கப்படுகிறது.
கால மாற்றத்தால் கும்மி பல மாற்றங்களைப் பெற்றுள்ளது. வைகாசி மாதம் கோவில் திருவிழாவின் போது முளைப்பாாி எடுத்துக் கும்மியடிப்பா்.
முளைப்பாாி வளா்க்கும் வீட்டின் முன் ஆறு நாட்களும் கோவிலில் ஒரு நாளும் கும்மியடிப்பாா்கள். இந்தக் கும்மியாட்டத்தில் பல்வேறு கருத்துகளைப் பற்றிய பாடல்களைப் பாடிக் கும்மியடித்து ஆடுகின்றனா்.
எந்தவொரு சுப நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தாலும் விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்றனா். அதேபோலக் கும்மி அடிக்கும் போதும் முதலில் விநாயகரை வணங்கியே ஆரம்பிக்கின்றனா்.
பள்ளிகளிலும், திருவிழாக்களிலும் சிறுமிகளும் மகளிரும் ஒரு சில இடங்களில் கும்மியடிக்கின்றனா். நாட்டுப்புறப்பாடல்களும், பாரதிதாசன், பாரதியாா் ஆகியோரது பாடல்களும் கும்மியடிக்கும்போது பாடப்படுவதுண்டு.
Reference:
காணொளி சுருக்கம்: https://www.youtube.com/watch?v=u5V6caYfK-w