PDF chapter test TRY NOW

உலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மனிதன் உற்றுநோக்கினான். அவற்றின் இயல்புகளை அறிந்துகொண்டான்.
இவ்வாறே மொழியையும் ஆழ்ந்து கவனித்தான்.
மொழியை எவ்வாறு பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை வரையறை செய்தான். அந்த வரையறைகளே இலக்கணம் எனப்படும்.
தமிழ் எழுத்துகளின் வகைதொகை அறிவோமா!.
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்

எழுத்து :
ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது
உயிர் எழுத்துகள் :
உயிருக்கு முதன்மையானது காற்று.
இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன.
வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் 'அ' முதல் 'ஔ' வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.

ஒலித்துப் பார்த்து உணர்வோம்!


- குறுகி ஒலிக்கும்
ஆகிய ஐந்தும் குறில் எழுத்துகள்.
- நீண்டு ஒலிக்கும்
ஆகிய ஏழும் நெடில் எழுத்துகள்.
- ஒவ்வோர் எழுத்தையும் உச்சரிப்பதற்குக் கால அளவு உண்டு.
- எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் கொண்டே குறில், நெடில் என வகைப்படுத்துகிறோம்.
மாத்திரை :
மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது.
ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கை நொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1 மாத்திரை
நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 2 மாத்திரை.