PDF chapter test TRY NOW
- மெய்யெழுத்துகள் :
- மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும்.
- மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது.







மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு - அரை மாத்திரை.
ஒலித்துப் பார்த்து உணர்வோம்!



உயிர்மெய் :
மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.
மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க் குறில் தோன்றுகிறது.
மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது.
ஆகவே உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இரு வகைப்படுத்தலாம்.
ஆய்த எழுத்து :
தமிழ் மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது.
அது 'ஃ' என்னும் ஆய்த எழுத்தாகும்.
ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு அரை மாத்திரை.
Reference:
திருத்திய பதிப்பு (2020)
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் .
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.