PDF chapter test TRY NOW
ஆய்தம் (ஃ)
எஃகு - இச்சொல்லின் இடையில் அமைந்துள்ள எழுத்து ஆய்த எழுத்து.
ஃ - மூன்று புள்ளிகளைக் கொண்ட வடிவம்.
ஒலிக்கும் மாத்திரை அளவு அரை (1/2)
மெய் அல்லது ஒற்று எழுத்தாகக் கருதுவர்.
அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற் புள்ளி என்னும் வேறுசில பெயா்களும் உண்டு.
அஃகேனம் - 247 தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையில் தனித்த எண்ணிக்கை கொண்ட எழுத்து.
ஆனால், தனித்து தனித்து இயங்காது. தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும், பின் ஒரு வல்லின உயிா்மெய் எழுத்தையும் சாா்ந்து வரும்.
தனித்த எண்ணிக்கை கொண்டதால் இதனைத் தனிநிலை எழுத்து என்று கூறுவர்.
அ.கி.பரந்தாமனார், நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்னும் நூலில் மாத்திரை அளவைப் பற்றிப் பின் வருமாறு பதிவு செய்வதைக் காணலாம்.
கண்ணிமைப் பொழுதும் கைந்நொடிப் பொழுதும் மாத்திரை எனப்படும்.
இன்ன இன்ன எழுத்தை இவ்வளவு இவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும் என்பது மொழியின் அறிவியல் நிலையை எடுத்துக் காட்டுகிறது.
இச்சிறிய மணித்துளி அளவையும் பாகுபாடுச் செய்து கூறியிருப்பதைப் பாருங்கள்.
”உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே”
நினைப்பது - கால் மாத்திரையாம் ;
இரண்டு விரல்களை ஊன்றல் – அரை மாத்திரையாம் ;
இரண்டு விரல்களை முறுக்கல் – முக்கால் மாத்திரையாம் ;
விடுத்தல் – ஒரு மாத்திரையாம்.
இத்தகைய, அறிவியல் முறையில் மாத்திரையை விளக்குவது வியப்பளிக்கிறது.
மெய்யெழுத்து, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் – ½ மாத்திரை (ஒவ்வொன்றுக்கும்)
உயிர்க் குறில், உயிர்மெய்க் குறில் – 1 மாத்திரை
உயிர் நெடில், உயிர்மெய் நெடில் – 2 மாத்திரை
மெய்யெழுத்துகளின் வகைகளான இனங்களைப் பாடலாகப் பாடுவோம் :
க்ச்ட்த்ப்ற் வல்லினமாம்
ங்ஞ்ண்ம்ன் மெல்லினமாம்
ய்ர்ல்வ்ழ்ள் இடையினமாம்
யாவரும் இங்கே ஓரினமாம்.
Reference:
திருத்திய பதிப்பு (2008)
அ.கி.பரந்தாமனார்
நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
பாரிநிலையம்,, சென்னை.