PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉயிர் எழுத்துகள் | – | 12 (அ முதல் ஔ வரை) |
மெய் எழுத்துகள் | – | 18 (க் முதல் ன் வரை) |
உயிர்மெய் எழுத்துகள் | – | 216 (க முதல் னௌ வரை) |
ஆய்தம் | – | 1 (ஃ) |
மொத்தம் | – | 247 |
உயிர் எழுத்துகள் – 12
அ, ஆ ஆகிய இரு உயிர் எழுத்துகளும் வாயைத் திறப்பதால் ஒலிக்கிறது.
இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்துகளும் உதடுகளை விரிப்பதால் பிறக்கிறது.
உயிர்மெய் எழுத்துகள் (Vowel Consonants) – 216.
ஒரு மெய் எழுத்தும் ஓர் உயிர் எழுத்தும் சேர்ந்து பிறக்கக் கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து. (க் + அ = க).
மெய் எழுத்துகள் பதினெட்டும் (18), உயிர்எழுத்துகள் பன்னிரண்டும் (12) சேர்ந்து (18x12=216) இருநூற்று பதினாறு (216) உயிர்மெய் எழுத்துகளாகப் பிறக்கின்றன.
இவ்வெழுத்துகளை இரு வகையாகப் பிரிக்கலாம்.
உயிர்மெய் குறில் எழுத்துகள் – 90 (உயிர்க் குறில் 5 x 18 மெய் எழுத்துகள்) ஒலிக்கும் மாத்திரை அளவு ஒன்று.
உயிர்மெய் நெடில் எழுத்துகள் –126 (உயிர் நெடில் 7 x 18 மெய் எழுத்துகள்) ஒலிக்கும் மாத்திரை அளவு இரண்டு.
'க' வரிசை முதல் 'ன' வரிசை வரை என 18 வரிசைகளை அட்டவணையாகக் காண்போம்.