PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅங்கு
இங்கு
அவள்
இவள்
அவன்
இவன்
அந்த
இந்த
இச்சொற்கள் எல்லாம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சுட்டிச் சொல்வதற்குப் பயன்படுகின்றன.
இச்சொற்கள் எழுவதற்கு அ, இ ஆகிய எழுத்துகளே காரணம்.
ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வதற்குப் பயன்படும் எழுத்தே சுட்டு எழுத்துகள் என்பர்.
அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்.
அ | அந்தப் பையன் | அவ்வீடு | அம்மரம் | அது |
இ | இந்தப் பக்கம் | இவ்வுலகம் | இம்மலை | இது |
உ என்னும் சுட்டு எழுத்து தற்கால வழக்கில் பயன்படுத்துவது இல்லை.
உதுக்காண்
உவன்
உங்கே
சுட்டு எழுத்துகள் பற்றிப் பவணந்தி முனிவர்,
அ, இ, உம் முதல் தனிவரின் சுட்டே (66)
என்று நன்னூல் இலக்கண நூலில் குறிக்கிறார்.
அ, இ - சுட்டு எழுத்துகளை ஐந்து தன்மைகளில் பகுத்துக் காண்பர்.
1. அகச்சுட்டு
2.புறச்சுட்டு
3. அண்மைச்சுட்டு
4. சேய்மைச்சுட்டு
5. சுட்டுத்திரிபு
1. அகச்சுட்டு :
அவள்
இவள்
அவன்
இவன்
அது
இது
அங்கு
இங்கு
இச்சொற்களில் அ, இ ஆகிய எழுத்துகள் சுட்டிப் பொருளை வலியுறுத்தி வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றே.
மேலும், இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளான அ, இ ஆகிய இரண்டையும் நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தராது.
அ + வள்
இ + வள்
அ + வன்
இ + வன்
அ + து
இ + து
அ + ங்கு
இ + ங்கு
சுட்டு எழுத்துகள் சொல்லுக்கு உள்ளேயே இருந்து சுட்டிக் காட்டும் பொருளை உணர்த்துவதால் இது அகச்சுட்டு.
அகம் + சுட்டு = அகச்சுட்டு
அகம் என்பதன் பொருள் உள்ளே.
2.புறச்சுட்டு :
அவ்வீடு
இம்மனிதன்
அக்குளம்
இம்மாடு
அந்நீர்வீழ்ச்சி
இம்மலை
இந்நூல்
இம்மரம்
அம்மரம்
இச்சொற்களில் அ, இ ஆகிய எழுத்துகள் சுட்டிப் பொருளை வலியுறுத்தி வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றே.
மேலும், இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளான அ, இ ஆகிய இரண்டையும் நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
அ + வீடு
இ + மனிதன்
அ + குளம்
இ + மாடு
அ + நீர்வீழ்ச்சி
இ + மலை
இ + நூல்
இ + மரம்
அ + மரம்
சுட்டு எழுத்துகள் சொல்லுக்குப் புறத்தே இருந்து சுட்டிக் காட்டும் பொருளை உணர்த்துவதால் இது புறச்சுட்டு.
புறம் + சுட்டு = புறச்சுட்டு
புறம் என்பதன் பொருள் வெளியே.
Reference:
https://pixabay.com/photos/finger-pointer-interpret-2126952/