PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
காரணப் பெயர் :
வரிசை எண்
பெயர் வகைகள்
விளக்கம்
1
காரணப்பெயர்
ஒரு பொருளுக்குக் காரணம் கருதி வழங்கப்பட்ட பெயர்ச்சொல்.
  
நாற்காலி    
  
முக்காலி    
  
இசை    
  
செங்கல்  
  
வளையல்  
  
பறவை
  
அணி  
  
கலைஞன் 
  
வேலன்
 
சிறுவன்
 
குழலி
 
வயிறு
      
இப்பெயர்கள் அதற்கான காரணத்தோடு சூட்டப்பட்டுள்ளன.
  
2
காரணப்பொதுப் பெயர்
 
காரணம் கருதி வழங்கப்படும் பெயர்களில் பொதுவானதாக அமையும் பெயர்ச்சொல்.
 
பறவை  
  
அணி  
   
கும்மி
  
வயிறு
  
வளை
  
என்பதான பெயர்ச் சொற்கள் எல்லாம் பொதுவாக அழைக்கப்படும் பெயர்ச் சொற்கள்.
 
பறவை- அனைத்து வகையான பறவைகளுக்கும் பொதுவாக அழைக்கப்படும் பெயர்.
 
அணி - அனைத்து வகையான அணிகலன்களுக்கும் பொதுவாக அழைக்கப்படும் பெயர்.
3
காரணப் சிறப்புப் பெயர்
  
காரணம் கருதி வழங்கப்படும் பெயர்களில் ஒன்றைச் சிறப்பாகக் குறிக்கும் பெயர்ச்சொல்.
     
வளையல்
  
பிறைசூடி
  
நாற்காலி
  
 என்பதான பெயர்ச் சொற்கள் எல்லாம் பொதுப் பெயர்களில் சிறப்பாகக் குறிப்பிட்டு அழைக்கப்படும் பெயர்ச் சொற்கள்.
 
வளை என்று பொதுவாக அழைக்கப்படும் பெயர்ச்சொல்லில் வளைந்து இருக்கும் வளையல் என்ற பொருளின் பெயரைக் குறிக்கும் சிறப்புப்பெயர்ச்சொல்.
 
பிறை என்று பொதுவாக அழைக்ப்படும் பெயர்ச்சொல்லில் பிறையைச் சூடியிருப்பதால் பிறைசூடி என்ற பெயரைக் குறிக்கும் சிறப்புப்பெயர்ச்சொல்.