PDF chapter test TRY NOW
குற்றியலிகரம் :
குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
குறுமை என்பது குறுகிய என்று பொருள்படும்.
இயல் என்பது ஓசை என்று பொருள்படும்.
இகரம் என்பது இ என்னும் உயிர்க்குறில் (ஒரு மாத்திரை அளவு கொண்டது) எழுத்து.
தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து அரை மாத்திரை அளவாகக் குறுகி ஒலிக்கும் இகரத்தை குற்றியலிகரம் என்பர்.
குற்றியலிகரம் இரு இடங்களில் மட்டும் வரும்.
இடம் ஒன்று :
நிலைமொழி இறுதியில் (ஈற்றில்) குற்றியலுகரம் வந்து, வருமொழி முதலில் யகர எழுத்து வந்து இணையும் (புணரும்) போது நிலைமொழி இறுதியில் (ஈற்றில்) உள்ள குற்றியலுகரம் இகரமாகத் திாியும்.
கொக்கு + யாது = கொக்கியாது
படகு + யாது = படகியாது
குரங்கு + யாது = குரங்கியாது
எனப்படுவது + யாது = எனப்படுவதியாது
தோப்பு + யாது = தோப்பியாது
நாடு + யாது = நாடியாது
இடம் இரண்டு :
மியா என்பது அசைச்சொல்.
ஓசை நயத்திற்காக வருவது.
மியா என்னும் சொல்லில் (ம் + இ = மி) இடம்பெறும் போது, தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.
கேள் + மியா = கேண்மியா
செல் + மியா = சென்மியா
குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை.
இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.