PDF chapter test TRY NOW

இந்தியா  மிகப்பெரிய நாடு.
 
மட்டைப்பந்தில்  இந்தியா  வென்றது.
 
இவ்விரு தொடர்களிலும் அமைந்துள்ள இந்தியா என்னும் சொல்லைக் கவனியுங்கள்.
 
முதல் தொடரில் உள்ள இந்தியா இடத்தைக் குறிக்கின்றது.
 
இரண்டாம் தொடரில் இந்திய வீரர்களைக்  குறிக்கின்றது.
 
இவ்வாறு ஒரு பொருளின் பெயர், தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறோரு பொருளுக்குத் தொன்றுதொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
 
ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்றுத்தொட்டு ஆகிவருவது  ஆகுபெயர்.
 
ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.
 
அவை,
  
1. பொருளாகு பெயர் (முதலாகு பெயர்)
 
2. இடவாகு பெயர்
 
3. காலவாகு பெயர்
 
4. சினையாகு பெயர்
 
5. பண்பாகு பெயர்
 
6. தொழிலாகு பெயர்
 
7. கருவியாகு பெயர்
 
8. காரியாகு பெயர்
 
9. கருத்தாகு பெயர்
 
10. எண்ணலளவை ஆகுபெயர்
 
11. எடுத்தலளவை ஆகுபெயர்
 
12. முகத்தலளவை ஆகுபெயர்
 
13. நீட்டலளவை ஆகுபெயர்
 
14. உவமையாகு பெயர்
 
15. சொல்லாகு பெயர்
 
16. தானியாகு பெயர்
 
பொருள்முதல் ஆறோடு அளவை சொல்தானி
கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
தொன்முறை உரைப்பன ஆகுபெயரே. - நன்னூல் 290