PDF chapter test TRY NOW
ல, ள, ழ – எழுத்துகள்
ல- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும்.
இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம்.
ள- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும்.
இதனைப் பொது ளகரம் என்கிறோம்.
இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்று கூறுவர்.
ழ- நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும்.
(ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்).
ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம்.
இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’ என்று கூறுவது இலக்கண மரபு.
பொருள் வேறுபாடு உணர்க.
விலை -பொருளின் மதிப்பு
விளை - உண்டாக்குதல்
விழை - விரும்பு
இலை – செடியின் இலை
இளை – மெலிந்து போதல்
இழை – நூல் இழை
ர, ற - எழுத்துகள்
ர - நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது.
இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.
ற - நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது.
இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.
பொருள் வேறுபாடு உணர்க.
ஏரி - நீர்நிலை | ஏறி - மேலே ஏறி |
கூரை - வீட்டின் கூரை | கூறை- புடைவை |