PDF chapter test TRY NOW

நா நெகிழ்ப் பயிற்சி
  
Slide6.JPG
  
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.
 
ஆரல்வாய் மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம். 
 
வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் கீழே விழுந்தார். 
 
பச்சைக் குழந்தை வாழைப் பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.
 
வியாழக்கிழமை கிழட்டு ஏழை கிழவன் வாழைப் பழத் தோல் வழுக்கி விழுந்தார்.
 
எல்லாக் குழந்தைகளும் காலையில் வேளைக்கு எழுந்து, பல் துலக்கி, காலைக்கடன் முடித்து, குளித்து, முழுகி, பய பக்தியுடன் கடவுளைத் தொழுது, உணவருந்தி, வாழைப்பழத்துடன் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன்  செல்வார்கள்.
 
கார்சீற நீர் சீறும்; ஏர் கிற வேர் கீறும்.
 
வாண வேடிக்கையை வானத்தில் கண்டுகளித்தான் நந்தன்.