PDF chapter test TRY NOW
ஐந்தாம்வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை உருபுகள்
இன், இல்
இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது பொருள்களில் வரும்.
நீங்கல்
தலையின் இழிந்த மயிர்
ஒப்பு
பாம்பின் நிறம் ஒரு குட்டி
எல்லை
தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல்
ஏது
சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம்
ஆறாம் வேற்றுமை உருபுகள் – அது, ஆது, அ
இவ்வேற்றுமை உரிமைப் பொருளில் வரும்.
உரிமைப் பொருளை கிழமைப் பொருள் என்றும் கூறுவர்.
எ.கா
இராமனது வில் நண்பனது கை
ஆது, அ ஆகிய உருபுகளை இக்காலத்தில் பயன்படுத்துவது இல்லை
ஏழாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு – கண் மேல், கீழ், கால், இல், இடம் போன்ற உருபுகளும் உண்டு.
இடம், காலம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்
எ.கா.
எங்கள் ஊரின்கண் மழை பெய்தது.
இரவின்கண் மழை பெய்தது