PDF chapter test TRY NOW

எட்டாம்  வேற்றுமை
 
விளிப்பொருளில் வரும் படர்க்கை பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதையே விளி வேற்றுமை என்பர்
 
இவ்வேற்றுமைக்கு என்று தனியே உருபு கிடையாது. பெயர்கள் திரிந்து வழங்குவது உண்டு.
 
அண்ணன் என்பதை அண்ணா என்றும் புலவர் என்பதைப் புலவரே என்றும் மாற்றி வழங்குவது
 
எட்டாம் வேற்றுமை கிழமை பொருளில் வரும் வேற்றுமை – ஆறாம் வேற்றுமை.
 
சில இடங்களில் உறுப்புகளுக்கு பதிலாக முழு சொற்களே வருவது உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.
 
வேற்றுமை உருபுகள் இடம்பெற்றுள்ள தொடர்கள் வேற்றுமைத் தொடர்கள் என்பர்.
 
வேற்றுமை உருபுகள் இடம்பெற வேண்டிய இடத்தில் அஃது இடம் மாறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அது வேற்றுமைத் தொகை என்பர்.
 
நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக ஆக என்னும் அசை சேர்ந்து வருவதுண்டு.
 
சான்று 
 
கூலிக்காக வேலை
 
இல் என்னும் உருபு ஐந்தாம்வேற்றுமையிலும் மற்றும் ஏழாம்வேற்றுமையிலும் உண்டு 
 
இல் என்னும் வேற்றுமை உருபு நீங்கல் பொருளில் வருவது – ஐந்தாம்வேற்றுமை.
 
இல் என்னும் வேற்றுமை உருபு இடப்பொருளில் வருவது – ஏழாம் வேற்றுமை
  
வ.எண்
வேற்றுமை 
உருபு
சொல்லுருபு
பொருள்
1
முதல் (எழுவாய்)இல்லைஆனவன், ஆவான், ஆகின்றவன்பயனிலை ஏற்றல்
2
இரண்டாம்இல்லை செயப்படுபொருள்
3
மூன்றாம்ஆல், ஆன், ஓடு, ஒடுகொண்டு,வைத்து, உடன், கூட கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி
4
நான்காம்குஆக, பொருட்டு, நிமித்தம்  கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை
5
ஐந்தாம்இல், இன்இலிருந்து, நின்று, காட்டிலும், பார்க்கிலும் நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது
6
ஆறாம்அது, ஆது, அஉடையகிழமை
7
ஏழாம்கண்---இடம், காலம்
8
எட்டாம்(விளி)இல்லைஇல்லைவிளி (அழைத்தல்)