PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநிலைமொழி - வருமொழி
புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு
இடையில் நிகழ்வது.
இரண்டுக்கு மேற்பட்ட
சொற்களாக இருந்தாலும் நிலைமொழி,
வருமொழி – வருமொழி, நிலைமொழியாகி
நிற்கும்.
எனவே, இருமொழிகளுக்கு இடையே
நிகழ்வதுதான் புணர்ச்சி. ஒரு சொல்லோடு
ஒட்டுகளோ, இன்னொரு சொல்லோ இணையலாம்.
அவ்வாறு இணையும்போது
ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு;
மாற்றம் இல்லாமலும் சேர்வதுண்டு.
புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி
எழுத்தைப் பொறுத்து உயிரீறு, மெய்யீறு
எனவும் வருமொழியின் முதல் எழுத்தைப்
பொறுத்து உயிர்முதல் மெய்ம்முதல் எனவும்
பிரிக்கலாம்.
புணர்மொழியின் இயல்பு
எழுத்து வகையால் சொற்கள் நான்கு வகைப்படும்
கலை + அழகு | உயிரீறு |
மண் + குடம் | மெய்யீறு |
வாழை + இலை | உயிர்முதல் |
வாழை + மரம் | மெய்ம்முதல் |
மேலும் இப்புணர்ச்சியை நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் நான்காகப் பிரிக்கலாம்.
உயிர் முன் உயிர் | மண் (ண்+இ) + அடி = மணியடி |
உயிர் முன் மெய் | பனி + காற்று = பனிக்காற்று |
மெய்ம் முன் உயிர் | ஆல் + இலை = ஆலிலை |
மெய்ம் முன் மெய் | மரம் + (க்+இ) கிளை = மரக்கிளை |
இயல்பு புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும்
புணர்ச்சியில் நிலைமொழியும்
வருமொழியும் அடையும் மாற்றங்களின்
அடிப்படையில் புணர்ச்சியை இரு வகைப்படுத்தலாம்.
புணர்ச்சியின்போது மாற்றங்கள்
எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும்.
வாழை + மரம்= வாழைமரம்
செடி + கொடி = செடிகொடி
மண் + மலை = மண்மலை
புணர்ச்சியின்போது ஏதேனும் மாற்றம்
நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
இந்த மாற்றம் மூன்று வகைப்படும். அவை:
தோன்றல், திரிதல் கெடுதல்
நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு
(தோன்றல்)
கல்லூரி + சாலை = கல்லூரிச்சாலை
(தோன்றல்)
பல் + பசை = பற்பசை (திரிதல்)
புறம் + நானூறு = புறநானூறு (கெடுதல்)