PDF chapter test TRY NOW
உயிரீற்றுப் புணர்ச்சி
உடம்படுமெய்
உயிரை ஈறாக உடைய சொற்களின்முன்
உயிரை முதலாக உடைய சொற்கள் வந்து
சேரும்;
அப்போது சொற்கள் சேராமல் தனித்து
நிற்கும்;
ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று
சேர்ப்பதற்கு அங்கு ஒரு மெய் தோன்றும்.
இதனை உடம்படுமெய் என்று சொல்வர்.
நிலைமொழியின் ஈற்றில் ‘இ,ஈ,ஐ’ என்னும்
உயிரெழுத்துகளை ஈறாக உடைய சொற்கள்
நிற்கும்.
அவற்றின்முன், பன்னிரண்டு
உயிர்களையும் முதலாவதாக உ டைய
சொற்கள் சேரும். அந்நிலையில் யகரம்உடம்படுமெய்யாக வரும்.
மணி + அழகு = மணி + ய் + அழகு =
மணியழகு
தீ + எரி = தீ + ய் + எரி = தீயெரி
ஓடை + ஓரம் = ஓடை + ய் + ஓரம் =
ஓடையோரம்
‘இ, ஈ, ஐ’ தவிர, பிற உயிரெழுத்துகள்
நிலைமொழி ஈறாக வரும்போது
அவற்றின்முன் வருமொழியில் பன்னிரண்டு
உயிர்களும் வந்து புணர்கையில் வகர மெய்
தோன்றும்.
பல + உயிர் = பல + வ் + உயிர் = பலவுயிர்
பா + இனம் = பா + வ் + இனம் = பாவினம்
நிலைமொழி ஈறாக ஏ காரம்
வந்து, வருமொழியில் பன்னிரண்டு
உயிரெழுத்துகளையும் உடைய சொற்கள் வந்து புணர்கையில் யகரமோவகரமோ தோன்றும்.
சே + அடி = சே + ய் + அடி = சேயடி;
சே + வ் + அடி = சேவடி
தே + ஆரம் = தே + வ் + ஆரம் = தேவாரம்
இவனே + அவன் = இவனே +ய் + அவன் =
இவனேயவன்
குற்றியலுகரப் புணர்ச்சி
வட்டு + ஆடினான் = வட் ( ட் + உ ) +
ஆடினான் = வட்ட் + ஆடினான் = வட்டாடினான்
நிலைமொழியாக வரும்
குற்றியலுகரத்தின் முன் உயிரெழுத்துகள்
வந்தால், நிலைமொழியிலுள்ள உகரம் கெடும்.
வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற
மெய்யுடன் இணையும்.
குற்றியலுகரத்தைப் போலவே சி ல
முற்றியலுகரங்களுக்கும் இவ்விரு விதிகளும்
பொருந்தும்.
உறவு + அழகு = உற(வ் +உ) = உறவ் + அழகு = உறவழகு