PDF chapter test TRY NOW

தோப்புக்கள் – தோப்புகள்
  
கத்தி கொண்டு வந்தான் – கத்திக்கொண்டு வந்தான்
 
மேற்கண்ட சொற்களில் வல்லினம் மிகும்போது ஒரு பொருளும் மிகாதபோது வேறொரு பொருளும் வருவதை அறியலாம்.
 
நாம் பேசும்போதும் எழுதும்போதும் பொருள் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகா இடங்களை அறிவது இன்றியமையாததாகும்.
 
வல்லினம் மிகா இடங்கள் :
 
தற்கால உரைநடையில் வல்லினம்மிகா இடங்களாகக் கீழ்க்காண்பவற்றைக் கூறலாம்.
 
அது செய்
 
இது காண்
அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
எது கண்டாய்?
 
எவை தவறுகள்?
வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
குதிரை தாண்டியது
 
கிளி பேசும்
எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.
அண்ணனோடு போ.
 
எனது சட்டை.
மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது.
தந்தையே பாருங்கள்.
 
மகளே தா.
விளித் தொடர்களில் வல்லினம் மிகாது
வந்த சிரிப்பு
 
பார்த்த பையன்
பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது
நாடு கண்டான்.
 
கூடு கட்ட
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது