PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வரும்படி சொன்னார்.
 
பெறும்படி கூறினார்
படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.
வாழ்க தமிழ்
 
வருக தலைவா!
வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.
குடிதண்ணீர்,
 
வளர்பிறை,
 
திருவளர்செல்வன்
வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
ஒரு புத்தகம்,
 
மூன்று கோடி
எட்டு, பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது
தாய்தந்தை,
 
இரவுபகல்
உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
அன்று சொன்னார்.
 
என்று தருவார்.
 
அவராவது தருவதாவது
 
யாரடா சொல்.
 
ஏனடி செல்கிறாய்?
 
கம்பரைப் போன்ற கவிஞர் யார்?
அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி, போன்ற  என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
அவ்வளவு பெரியது.
 
அத்தனை சிறியது.
 
அவ்வாறு பேசினான்.
 
அத்தகைய பாடங்கள்.
 
அப்போதைய பேச்சு.
 
அப்படிப்பட்ட காட்சி.
 
நேற்றைய சண்டை.
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை,  இத்தனை, எத்தனை,  அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு,  அத்தகைய, இத்தகைய, எத்தகைய, அப்போதைய, இப்போதைய, எப்போதைய, அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட நேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது.