PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமெய் எழுத்துகள்(18) :
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன் |
மூன்று இனங்களாகப் பிரிப்பர். (3 \(\times\) 6 = 18)
1. வல் இனம் (6)
2. மெல் இனம் (6)
3. இடை இனம் (6)
வல் இனம் (6) | மெல் இனம் (6) | இடை இனம் (6) |
க் | ங் | ய் |
ச் | ஞ் | ர் |
ட் | ண் | ல் |
த் | ந் | வ் |
ப் | ம் | ழ் |
ற் | ன் | ள் |
மெய் எழுத்துகளில் ஆறு மெல் இன எழுத்துகளும் ஆறு வல் இன எழுத்துகளுக்கு இன எழுத்துகளாக உள்ளன.
மெல் இன எழுத்துகளுக்குப் பின்பு வல் இன எழுத்துகள் வருகின்றன.
மெல் இனம் | வல் இனம் | இன எழுத்துகள் | சான்று |
ங் | க் | ங்க் | சங்கு |
ஞ் | ச் | ஞ்ச் | வஞ்சி |
ண் | ட் | ண்ட் | வண்டி |
ந் | த் | ந்த் | பந்து |
ம் | ப் | ம்ப் | கம்பு |
ன் | ற் | ன்ற் | கன்று |
சான்றுகள் :
தங்கல் | செங்கல் | வங்கம் | பங்கு | பங்கம் | தங்கம் |
கஞ்சி | பஞ்சு | தஞ்சம் | கஞ்சம் | அஞ்சேல் | மஞ்சு |
தண்டு | வண்டு | மண்டி | தண்டி | கண்டு | வேண்டு |
சந்து | சந்தி | வந்து | கடந்த | பாய்ந்து | பொந்து |
பாம்பு | கம்பம் | தெம்பு | செம்பு | சோம்பு | தாம்பரம் |
நன்றி | பன்றி | வென்று | சென்ற | நன்று | அன்று |
பொங்கல் | அங்கு | எங்கள் | அங்கம் | மங்களம் | சங்கிலி |
மஞ்சள் | வஞ்சம் | பஞ்சம் | கெஞ்சி | அஞ்சி | இஞ்சி |
பண்டம் | கண்டம் | தூண்டில் | தூண்டும் | நீண்ட | அண்டம் |
வெந்து | பந்தல் | தந்ததே | தெளிந்து | ஐந்து | பிரிந்து |
கம்பளம் | தம்பி | கம்பி | தும்பி | வெம்பி | விரும்பி |
இன்றி | சான்று | தென்றல் | நின்று | இயன்ற | ஒன்று |
இடை இனம் ஆறும் எழுத்துகள் ஒரே இனமாக வரும்.
தமிழ் எழுத்துகளில் ஆய்த (ஃ) எழுத்திற்கு மட்டும் இனம் இல்லை.