PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo3. அண்மைச்சுட்டு :
இவர்
இவை
இவள்
இவன்
இது
இந்த
இங்கு
இம்மரம்
இவ்வீடு
இவ்விடம்
இப்பூனை
இப்புத்தகம்
இம்மாடு
இக்கட்டில்
இக்காட்டில்
இச்சொற்களில் இ என்னும் எழுத்து சுட்டிப் பொருளை வலியுறுத்தி வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றே.
இச்சுட்டுச் சொற்கள் அண்மையில் உள்ளவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன.
அண்மையில் உள்ளவற்றைச் சுட்டிக் காண்பிப்பது அண்மைச்சுட்டு என்பர்.
அண்மைச்சுட்டு எழுத்து இ ஆகும்.
அண்மை + சுட்டு = அண்மைச்சுட்டு
அண்மை என்பதன் பொருள் அருகில்.
4. சேய்மைச்சுட்டு :
அவர்
அவை
அவள்
அவன்
அது
அந்த
அங்கு
அம்மரம்
அவ்வீடு
அவ்விடம்
அப்பூனை
அப்புத்தகம்
அம்மாடு
அக்கட்டில்
அக்காட்டில்
அக்கரை
அக்குளம்
இச்சொற்களில் அ என்னும் எழுத்து சுட்டிப் பொருளை வலியுறுத்தி வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றே.
இச்சுட்டுச் சொற்கள் நம் சேய்மையில் உள்ளவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன.
சேய்மையில் உள்ளவற்றைச் சுட்டிக் காண்பிப்பது சேய்மைச்சுட்டு என்பர்.
சேய்மைச்சுட்டு எழுத்து அ ஆகும்.
சேய்மை + சுட்டு = சேய்மைச்சுட்டு
சேய்மை என்பதன் பொருள் தொலைவில்.
5. சுட்டுத்திரிபு :
அம்மரம்
அவ்வீடு
அவ்விடம்
அப்பூனை
அப்புத்தகம்
அம்மாடு
அக்கட்டில்
அக்காட்டில்
அக்கரை
அக்குளம்
அப்பள்ளி
இம்மரம்
இவ்வீடு
இவ்விடம்
இப்பூனை
இப்புத்தகம்
இம்மாடு
இக்கட்டில்
இக்காட்டில்
இப்பள்ளி
இச்சொற்கள் புறச்சுட்டுகள் என்று நாம் அறிந்ததே.
இச்சொற்களை,
அந்த மரம்
அந்த வீடு
இந்த மாடு
இந்தக் கட்டில் என்றும் வழங்கி வருகிறோம்.
அ, இ சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து)அந்த, இந்த என்று வழங்கி வருகின்றன.
இவ்வாறு, அ, இ சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து)அந்த, இந்த என்று வழங்கி வருவதைச் சுட்டுத்திரிபு என்பர்.