PDF chapter test TRY NOW
தமிழ் மொழியில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையை நினைவு கூர்க.
வரிசை எண் | எழுத்துகளின் பெயர்கள் | எண்ணிக்கை | எழுத்துகள் |
1 | உயிர் எழுத்துகள் | 12 | அ முதல் ஔ வரை |
2 | மெய் எழுத்துகள் | 18 | க் முதல் ன் வரை |
3 | உயிர்மெய் எழுத்துகள் | 216 | க முதல் னௌ வரை |
4 | ஆய்தம் | 1 | ஃ |
மொத்தம் | 247 |
247 - எழுத்துகளை அட்டவணையின் மூலம் நினைவுபடுத்தலாம்.
மேற்கண்ட எழுத்துகள் அனைத்தும் மொழி முதலில், இடையில், இறுதியில் வருவது இல்லை.
இவற்றை விரிவாகக் காணலாம்.
மொழி என்னும் சொல்லுக்கான பொருள் - சொல், பதம், கிளவி.
இங்கு மொழி என்பது சொல் என்னும் பொருளில் வழங்கி வருகிறது.
மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளை மொழி முதல் எழுத்துகள் என்பர்.
மொழியின் அல்லது சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் மொத்தம் 102 ஆகும்.
வரிசை எண் | எழுத்துகள் | எண்ணிக்கை |
1 | உயிர்எழுத்துகள் | 12 |
2 | உயிர்மெய்எழுத்துகள் - க, ச, த, ந, ப, ம வரிசைகள் (அனைத்தும்) | 72 |
3 | ங - வரிசை (ங என்னும் ஓர் எழுத்து மட்டும்) | 1 |
4 | ஞ - வரிசை (ஞ, ஞா, ஞெ, ஞொ) | 4 |
5 | ய - வரிசை (ய, யா, யு, யூ, யோ, யௌ) | 6 |
6 | வ - வரிசை (வ, வா, வி, வீ, வெ, வே, வை) | 7 |
மொத்த எழுத்துகள் | 102 |
247 - எழுத்துகள் கொண்ட அட்டவணையில், வண்ணமிட்ட எழுத்துகள் (102) மொழிக்கு அல்லது சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் ஆகும்.
சான்றுகளுடன் காணலாம்.
உயிர் எழுத்துகள் - 12
வரிசை எண் | உயிர் எழுத்துகள் - 12 | சான்றுகள் |
1 | அ | அறம் |
2 | ஆ | ஆமை |
3 | இ | இசை |
4 | ஈ | ஈகை |
5 | உ | உன் |
6 | ஊ | ஊன் |
7 | எ | எண் |
8 | ஏ | ஏறு |
9 | ஐ | ஐந்து |
10 | ஒ | ஒன்று |
11 | ஓ | ஓநாய் |
12 | ஔ | ஔடதம் |
உயிர்மெய் எழுத்துகள் - க, ச, த, ந, ப, ம வரிசைகள் (72 - எழுத்துகள்).
க - வரிசை (12 - எழுத்துகள்) | ச - வரிசை (12 - எழுத்துகள்) | த - வரிசை (12 - எழுத்துகள்) | ந - வரிசை (12 - எழுத்துகள்) | ப - வரிசை (12 - எழுத்துகள்) | ம - வரிசை (12 - எழுத்துகள்) |
கண்ணாடி | சட்டை | தராசு | நன்றி | பன்றி | மண்டலம் |
காக்கா | சாளரம் | தாளம் | நாடகம் | பாசம் | மாங்காய் |
கிண்ணம் | சிரட்டை | திரட்டு | நிதர்சனம் | பிங்கலண்டு | மிளகாய் |
கீறல் | சீரகம் | தீரன் | நீளம் | பீமன் | மீசை |
குயில் | சுண்ணாம்பு | தும்பி | நுணல் | புவிஈர்ப்பு | முறுக்கு |
கூவும் | சூரியன் | தூரிகை | நூல் | பூம்புகார் | மூடை |
கெண்டை | செண்பகம் | தென்றல் | நெத்திலி | பெடை | மென்மை |
கேளிக்கை | சேணை | தேரை | நேரம் | பொழிப்பு | மேன்மை |
கை | சைகை | தையல் | நையப்புடை | பை | மை |
கொக்கு | சொடுக்கி | தொன்மை | நொந்து | பொழிவு | மொச்சை |
கோடை | சோளம் | தோழன் | நோம்பு | போதல் | மோர் |
கௌதமி | சௌசௌ | தௌதிகம் | நௌவி | பௌவம் | மௌனம் |
ங, ஞ, ய, வ - வரிசைகள் (18- எழுத்துகள்).
ஞ - வரிசை (4 - எழுத்துகள்) | ய - வரிசை (6 - எழுத்துகள்) | வ - வரிசை (7 - எழுத்துகள்) |
ஞமலி | யசனம் | வண்ணம் |
ஞாயிறு | யான் | வானவில் |
ஞிமிலி | யுத்தம் | விவேகம் |
ஞெகிழம் | யூகம் | வீரம் |
யோகம் | வெற்றிலை | |
யௌதகம் | வேட்டை | |
வைத்தல் |