PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமொழி முதலில் வராத எழுத்துகள்.
மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைத் தவிர பிற எழுத்துகள் மொழி முதலில் வராத எழுத்துகள் ஆகும்.
மொழியின் அல்லது சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் மொத்தம் 102 ஆகும்.
தமிழ் மொழி மொத்த எழுத்துகள்- 247.
இவ்விரண்டு எண்ணிக்கையையும் கழித்தால் (-) வரக்கூடிய எண்ணிக்கையே மொழிமுதல் வராத எழுத்துகளின் எண்ணிக்கை.
தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை | 247 |
மொழி முதலில் வரும் எழுத்துகள் எண்ணிக்கை | 102 |
மொழி முதலில் வராத எழுத்துகள் எண்ணிக்கை | 145 |
ஆக, மொழி முதலில்வராத எழுத்துகள் மொத்தம் 145 என்று நாம் எளிமையாகக் கணக்கிடலாம்.
வரிசை எண் | எழுத்துகள் | எண்ணிக்கை |
1 | மெய் எழுத்துகள் | 18 |
2 | உயிர்மெய் எழுத்துகள் - ட, ண, ர, ல, ழ, ள, ற, ன - வரிசைகள் (அனைத்தும்) | 96 |
3 | ங - வரிசை (ங என்னும் ஓர் எழுத்தைத் தவிர ஏனைய எழுத்துகள்) | 11 |
4 | ஞ - வரிசை (ஞி, ஞீ, ஞு, ஞூ, ஞே, ஞை, ஞோ, ஞௌ) | 8 |
5 | ய - வரிசை (யி, யீ, யெ, யே, யை, யொ) | 6 |
6 | வ - வரிசை (வு, வூ, வொ, வோ,வௌ) | 5 |
7 | ஆய்த எழுத்து (ஃ) | 1 |
மொத்த எழுத்துகள் | 145 |
247 - எழுத்துகள் கொண்ட அட்டவணையில், வண்ணமிட்ட எழுத்துகள் (145) மொழிக்கு அல்லது சொல்லுக்கு முதலில் வராத எழுத்துகள் ஆகும்.
மொழி இடையில் வரும் எழுத்துகள் :
மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இறுதி வரும்.
உயிர்மெய் எழுத்துகள் (216) சொல்லின் இடையில் வரும்.
ஆய்த எழுத்து (ஃ) சொல்லின் இடையில் வரும்.
கீழ்க்காணும் அட்டவணை மொழிக்கு அல்லது சொல்லுக்கு இடையில் வரும் எழுத்துகள்.
குறிப்பு : வேறுபட்ட வண்ணத்தில் உள்ள உயிர் எழுத்துகள் அளபெடையில் மட்டுமே சொல்லின் இடையில் வரும்.
சான்றுகள்.
அளபெடையில் வரும் உயிர் எழுத்துகள்.
ஓஒதல் | நல்லபடாஅபறை | வெரூஉம் |
தொழாஅர் | தூஉம் | கொடுப்பதூஉம் |
இன்புறூஉம் | எடுப்பதூஉம் | கெடுப்பதூஉம் |
துன்புறூஉம் | உழாஅர் | உறாஅர்க்கு |
மெய் எழுத்துகள்.
பக்கம் | ஏக்கர் | நோக்கு | முக்கனி |
தங்கம் | அடங்கிய | படங்கள் | வாருங்கள் |
அச்சு | எச்சம் | தச்சன் | ஆச்சி |
அஞ்ஞாடி | மஞ்சள் | அஞ்ஞானம் | பூஞ்சோலை |
பாட்டி | சட்டம் | வட்டம் | எட்டு |
வண்டி | இரண்டு | கொண்டது | அண்ணா |
வாத்து | பார்த்து | சேர்த்து | வியர்த்து |
வந்து | சூழ்ந்து | ஐந்து | சந்து |
காப்பகம் | விருப்பம் | வகுப்பு | ஆப்பம் |
பம்பரம் | கம்பம் | செம்பு | பாம்பு |
வாய்க்கால் | பாய்மரம் | செய்தி | மேய்க்க |
வார்ப்பு | சார்ந்து | பார்த்து | சேர்த்து |
வால்பாறை | நூல்கள் | கல்வி | கல்லாதது |
சவ்வு | அவ்வளவு | கவ்வியம் | எவ்வளவு |
வாழ்க்கை | மகிழ்ச்சி | நெகிழ்ச்சி | புகழ்ச்சி |
கள்வன் | பள்ளி | வள்ளி | உள்ளது |
வெற்றிலை | காற்று | வெற்றிடம் | கற்க |
நன்று | அன்றில் | நான்கு | ஆன்ற |