PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகளை  மொழி இறுதி எழுத்துகள் என்பர்.
 
உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.
 
ஞ், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்  எழுத்துகள்  பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும்.
 
247 - எழுத்துகள் கொண்ட அட்டவணையில், வண்ணமிட்ட எழுத்துகள் மொழிக்கு அல்லது சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகள் ஆகும்.
 
மொழி இறுதி வரும்.png
 
சான்றுகள்.
மொழி  இறுதி மெய்  எழுத்துகள் - 11
 
உரிஞ்ண்அறிந்வரும்
வாய்வயர்ல்வ்
வாழ்முள்ன்---
மொழி இறுதியில் வராத எழுத்துகள்.
சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.
ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில்  வராது.
 
மொழியின் அல்லது சொல்லின் இறுதியில் வராத எழுத்துகள் மொத்தம்  65 ஆகும்.
வரிசை எண்
எழுத்துகள்
எண்ணிக்கை
1
உயிர் எழுத்துகள் ( முதல் வரை)
  12
2
ஆய்த எழுத்து (ஃ)
    1
3
மெய் எழுத்துகள் (க், ங், ச், ட், த், ப், ற்)
    7
4
உயிர்மெய் எழுத்து ங - வரிசை 
  10
5
உயிர்மெய் எழுத்து எ - வரிசை 
   18
6
உயிர்மெய் எழுத்து ஒ - வரிசை (நொ - தவிர)  
   17
 
மொத்த எழுத்துகள்
   65
 
247 - எழுத்துகள் கொண்ட அட்டவணையில்,  வண்ணமிட்ட எழுத்துகள் (65)  மொழிக்கு அல்லது சொல்லுக்கு இறுதியில் வராத எழுத்துகள் ஆகும்.
 
குறிப்பு : உயிர் எழுத்துகள் (12) மொழி இறுதியில் வராது. அளபெடையாக வரும்போது மட்டும் மொழி இறுதியில் வரும்.
 
மொழி இறுதியில் வரா (1).svg
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு 6 - திருந்திய பதிப்பு 2020.
 
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.