PDF chapter test TRY NOW
அறம் செய விரும்பு என்பது ஔவையின் வாக்கு.
அறன் வலியுறுத்தல் என்பது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் அதிகாரங்களுள் ஒன்று.
இத்தொடர்களில் அறம் - அறன் என்னும் சொற்களில் இறுதி எழுத்துகள் மாறி வந்துள்ளன.
இருப்பினும், பொருள் மாறவில்லை.
இப்படி, ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில், வேறு ஓர் எழுத்து வந்தும் பொருள் மாறாமல் இருப்பதைப் போலி என்று கூறுவர்.
போலி என்னும் சொல்போல இருத்தல் என்பதிலிருந்து தோன்றியது.
போலி எழுத்துகள் சொல்லின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் வரும். இவற்றை முறையே,
1.முதற்போலி
2.இடைப்போலி
3.இறுதிப்போலி
மேலும், முற்றுப்போலி, இலக்கணப் போலி என்றும் வரையறுப்பர்.
1. முதற்போலி :
ஒரு சொல்லின் முதலில் உள்ள எழுத்து மாற்றம் பெற்று அதே பொருளைத் தருவதை முதற்போலி என்பர்.
பசல் | பைசல் |
மயல் | மையல் |
மஞ்சு | மைஞ்சு |
இந்தச் சொற்களில் அகரம் வரவேண்டிய இடங்களில் ஐகாரம்வந்துள்ளது.
நாயிற்றுக்கிழமை | ஞாயிற்றுக்கிழமை |
நயம்ப உரை | ஞயம்பட உரை |
ஔவையார் | அவ்வையார் |
ஐயன் | அய்யன் |
2. இடைப் போலி :
இடைப்போலிசொல்லுக்கு இடையில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வருவது இடைப்போலி ஆகும்.
அமச்சு | அமைச்சு |
அரயர் | அரையர் |
இலஞ்சி | இலைஞ்சி |
மாசம் | மாதம் |
இந்தச் சொற்களில், அகரம் வரவேண்டிய இடங்களில் ஐகாரம் வந்துள்ளது.
இவை, சொல்லுக்கு இடையில் வந்துள்ளதால் இடைப்போலி எனப்படும்.