PDF chapter test TRY NOW
இடைப் போலி :
அ ஐமுதல் இடை ஒக்கும் சஞயமுன் - நன்னூல்நூற்பா - 123.
அகரமும் ஐகாரமும் சொல்லுக்கு முதலிலும் நடுவிலும் ச, ஞ, ய என்னும் மெய்களுக்கு முன் தம்முள் வேறு பாடில்லாமல் ஒத்து நடக்கும்.
ஐகான் அவ்வழி நவ்வொடு சில்வழி
ஞஃகான் உறழும் என்மரும் உளரே. - நன்னூல் நூற்பா - 124
சொல்லுக்கு நடுவில் சில இடங்களில் ஐகாரத்தின் பின்னும், யகர மெய்யின் பின்னும் வருகின்ற நகர மெய்யோடு ஞகர மெய் போலியாகவரும் என்று சொல்லுபவரும் உளர்.
கைந்நின்ற | கைஞ்ஞின்ற |
செய்ந்நின்ற | செய்ஞ்ஞின்ற |
ஐந்நூறு | ஐஞ்ஞூறு |
சேய்நலூர் | சேய்ஞலூர் |
இறுதிப் போலி :
இறுதிப்போலி, சொல்லின் இறுதியில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வந்து அதே பொருளைத் தருவது இறுதிப்போலி எனப்படும்.
இதைக் கடைப்போலி எனவும் கூறுவர்.
முகம் | முகன் |
குலம் | குலன் |
அகம் | அகன் |
அறம் | அறன் |
நலம் | நலன் |
நிலம் | நிலன் |
சாம்பல் | சாம்பர் |
பந்தல் | பந்தர் |
குடல் | குடர் |
சுவல் | சுவர் |
அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக னகரம்கடைப்போலியாக வரும்.
முகம் | முகன் |
குலம் | குலன் |
அகம் | அகன் |
அறம் | அறன் |
நலம் | நலன் |
நிலம் | நிலன் |
லகர எழுத்திற்குப் பதிலாக ரகரம்கடைப்போலியாக வரும்.
நலம் | நலன் |
பந்தல் | பந்தர் |
குடல் | குடர் |
சுவல் | சுவர் |
சொற்களின் இறுதியில் மகரஒற்று வரவேண்டிய இடத்தில் னகரஒற்றும்,லகரஒற்று வரவேண்டிய இடத்தில் ரகரஒற்றும் வந்துள்ளன.
இவ்வாறு வருவது இறுதிப்போலி எனப்படுகிறது.
மகர இறுதி அஃறிணைப் பெயரின்
னகரமோடு உறழா நடப்பன உளவே. நன்னூல் நூற்பா 122.
பால்பகா அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நின்ற மகரமெய்,னகரமெய்யுடன் ஒத்து நடக்கும் இடங்களும் உண்டு.
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு ஏழு - திருந்திய பதிப்பு 2020.
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம், சென்னை. பதிப்பு - சூலை, 2001.
நல்ல தமிழ் எழுத வேண்டுமா? அ.கி.பரந்தாமனார்- பாரிநிலையம், பதிப்பு 2008
போலி எழுத்துகள், இணையதளப்பதிவு - தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை.