PDF chapter test TRY NOW
பகுபத உறுப்புகள்
பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.
1. பகுதி
2. விகுதி
3. இடைநிலை
4. சந்தி
5. சாரியை
6. விகாரம் ஆகியவையாகும்.
பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும். வினைப்பகுபதத்தின் பகுதி கட்டளையாகவே அமையும்.
பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால் எண், இடம் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்.
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும்.
பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்ப டும்.
பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
சான்று
வந்தனன் | - வா(வ) + த்(ந் ) + த் + அன் + அன் |
வ | - பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம். |
த் | - சந்தி. இது ந் எனத் திரிந்து இருப்பது விகாரம் |
த் | - இறந்த கால இடைநிலை |
அன் | - சாரியை |
அன் | - ஆண்பால் வினை முற்று விகுதி. |
பகாப்பதம்
மரம், கழனி, உண், எழுது ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
இவற்றை மேலும் சிறிய உறுப்புகளாகப் பிரிக்க முடியாதல்லவா?
இவ்வாறு பகுபத உறுப்புகளாகப் பிரிக்க முடியாத சொல் பகாப்பத ம் எனப்படும். இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும். பெயர், வினை , இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உண்டு.
சான்று
பெயர்ப் பகாப்பதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று.
வினைப் பகாப்பதம் - நட, வா, படி, வாழ்.
.
இடைப் பகாப்பதம் - மன், கொல், தில், போல்.
உரிப் பகாப்பதம் - உறு, தவ, நனி, கழி.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
Reference:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு ஏழு - திருந்திய பதிப்பு 2020.
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.