PDF chapter test TRY NOW
பதம் என்பதன் பொருள் சொல்.
இரு வகைப்படும்.
1. பகுபதம்
2. பகாப்பதம் 1. பகுபதம்
வேலன், படித்தான் ஆகிய சொற்களை கவனியுங்கள்.
வேலன் என்னும் சொல்லை வேல் + அன் எனப் பிரிக்கலாம்.
படித்தான் என்னும் சொல்லைப் படி + த் + த் + ஆன் எனப் பிரிக்கலாம்.
சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களைப் பகுபதங்கள் என்பர்.
பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் எனக் குறிப்பிடுவர்.
பெயர்ப்பகுபதம்
பகுபதமாக அமையும் பெயர்ச்சொல்பெயர்ப்பகுபதம் ஆகும்.
இதனை, பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படுத்துவர்.
சான்று.
பொருள் | - பொன்னன் (பொன் + அன்) |
இடம் | - நாடன் (நாடு + அன்) |
காலம் | - சித்திரையான் (சித்திரை + ஆன்) |
சினை | - கண்ணன் (கண் + அன்) |
பண்பு | - இனியன் (இனிமை + அன்) |
தொழில் | - உழவன் (உழவு + அன்) |
வினைப்பகுபதம்
பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும்.
உண்கிறான் - உண் + கின்று + ஆன்
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு ஏழு - திருந்திய பதிப்பு 2020.
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.