PDF chapter test TRY NOW

ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
 
எ.கா.
  
காற்று வீசியது
  
குயில் கூவியது
 
முதல் தொடரில் “காற்று” என்னும் எழுவாயும்  “வீசியது” என்னும்  பயனிலையும் தொடர்ந்து நின்று வேறுசொல் வேண்டாது பொருளை உணர்த்துகின்றது.
 
அதேபோன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும் பயனிலையும் தொடர்ந்து நின்று குயில் கூவியது என்னும் பொருளைத் தருகின்றது.
 
தொகா நிலைத் தொடரின் ஒன்பது வகைகள்
1.எழுவாய்த்தொடர்
எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.
 
இனியன் கவிஞர்      -   பெயர்
காவிரி பாய்ந்தது     -   வினை
பேருந்து வருமா?     -   வினா
 
மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர், வினை , வினா ஆகியவற்றுக்கான பயனிலைகள் வந்து எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன.
2. விளித்தொடர்
விளியுடன் வினை தொடர்வது  விளித்தொடர்  ஆகும்.
 
நண்பா எழுது ! 
  
" நண்பா "என்னும் விளிப்பெயர்  "எழுது" என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளது.
3. வினைமுற்றுத் தொடர்
வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத் தொடர் ஆகும்.
 
பாடினாள் கண்ணகி
 
"பாடினாள் " என்னும் வினை முற்று முதலில் நின்று ஒரு பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.