PDF chapter test TRY NOW

4. பெயரெச்சத் தொடர்
முற்றுப் பெறாத  வினை,  பெயர்ச் சொல்லைக் கொண்டு  முடிவது  பெயரெச்சத் தொடர் எனப்படும்.
 
கேட்ட பாடல் - "கேட்ட " என்னும் எச்ச வினை  "பாடல்" என்னும் பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.
5. வினையெச்சத்தொடர்
முற்றுப் பெறாத  வினைவினைச்சொல்லைக் கொண்டு  முடிவது  வினையெச்சத் தொடர் ஆகும்.
 
பாடி மகிழ்ந்தனர்
 
"பாடி" என்னும் எச்ச வினை  "மகிழ்ந்தனர்" என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.
6. வேற்றுமைத்தொடர்
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்.
 
கட்டுரையைப் படித்தாள் .
 
இத்தொடரில் என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
 
அன்பால் கட்டினார்  (ஆல்) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
 
அறிஞருக்குப் பொன்னாடை  (கு) நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
7. இடைச்சொல் தொடர்
இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
 
மற்றொன்று - மற்று + ஒன்று
 
"மற்று" என்னும் இடைச்சொல்லை அடுத்து "ஒன்று" என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
8. உரிச்சொல் தொடர்
உரிச்சொல்லுடன் பெயரோ. வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.
 
சாலச் சிறந்தது 
 
 "சால" என்பது உரிச்சொல்.
 
அதனைத் தொடர்ந்து "சிறந்தது" என்ற சொல் நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.
9. அடுக்குத் தொடர்
ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.
 
வருக! வருக! வருக!
 
ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.
 
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு பத்து - திருந்திய பதிப்பு 2020.
 
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.