PDF chapter test TRY NOW

வினையாலணையும் பெயர்கள்
 
வினையாலணையும் பெயர்கள் என்பனவும் ஒரு வகையில் தொழிற்பெயர்கள் போன்றவையே.
 
வினையால் அணையும் பெயர் என்பதுவே அச்சொல்லின் இயல்பைப் புலப்படுத்தும்.
 
வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.
 
வந்தான் (வந்தவன்) நல்லவன்.
  
வந்தானைப் (வந்தவனைப்) பார்த்தேன்.
 
வினைமுற்றுச் சொற்கள் வினையாலணையும் பெயர்களாக வருகின்றன.
 
குறிப்பு வினையெச்சம்
 
குறிப்பு வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டாமல் பண்பின் அடிப்படையில் வினைச் சொல்லைக் கொண்டு முடியும்.
 
சான்று
  
மெல்ல நடந்தான்
 
கோபமாகப்  பேசினான் 
 
முற்றெச்சம்
 
ஒரு வினைமுற்று சொல் தன்னுடைய வினைமுற்று பொருளை தராமல். வினையெச்ச பொருளைத் தருமாயின் அதற்கு "முற்றெச்சம்" என்று பெயர்.
 
இரண்டு வினைமுற்று தொடர்ந்து வருமாயின் அது முற்றெச்சம் ஆகிறது.
 
சான்று
  
சிறுவர்  பாடினர்
  
மகிழ்ந்தனர்  படித்தனர்
 
 
வினைத்தொகை
 
மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச்சொல்லால் தழுவப்பெற்று வரும் தொடரே வினைத்தொகை ஆகும்.
 
சான்று 
 
ஊறுகாய் 
  
படர்கொடி 
  
சுடுசோறு   
  
குடிநீர்
  
வினைத்தொகையில்இரு சொற்கள் இருக்கும்.
 
முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும்.
 
இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.
 
ஊறுகாய் என்பதில் ஊறு என்பதை வினைச்சொல்லாகவும்காய் என்பதை பெயர்ச்சொல்லாகவும் எடுத்துக் கொள்க.
 
இந்த ஊறுகாய் என்ற சொல்லில் மூன்று காலங்களும் மறைந்து இருக்கின்றன.
  
ஊறிய காய்  இறந்தகாலம் 
 
ஊறுகின்ற காய் நிகழ்காலம் 
 
ஊறும் காய் எதிர்காலம்