PDF chapter test TRY NOW

செய்ய வந்தேன்
  
செய்து வந்தான்
 
தொடர்களில் இடம்பெற்றுள்ள செய்ய, செய்து என்னும் சொற்கள் தமக்குப் பின் ஒரு வினைமுற்றுச் சொல்லைக் கொண்டே முடிவதால், வினையெச்சம் என்று சொல்லப் பெறுகின்றன.
 
கேட்கும் செவி
  
காணும் கண்
 
என்னும் தொடர்களில் உள்ள கேட்கும், காணும் என்னும் சொற்கள் தமக்குப்பின் ஒரு பெயர்ச்சொல் கொண்டு முடிவதால், அவற்றைப் பெயரெச்சம் என்கிறோம்.
 
இப்பெயரெச்ச, வினையெச்சச் சொற்களும் ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலை பெற்று வரும். கேள் + ஆ - கேளாச் செவி காண் + ஆ - காணாக் கண் எதிர்மறைப் பெயரெச்சம்
 
பாராது இருந்தாள்
  
எழுதாமல் இருந்தான்
 
ஏவல் வினை
 
வினைப் பகுதியோடு முன்னிலை விகுதி சேர்ந்தே ஏவல் வினை அமையும். இக்காலத்தில் விகுதி இல்லாமலும் பயன்படுத்துகிறோம்.
 
இது, வாழ்த்தல், விதித்தல், வேண்டல், வைதல் என்னும் பொருள்களில் வரும்.
 
வியங்கோள், இருதிணை, ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாக வரும்.  
  
வாழ்க, வெல்க - வாழ்த்தல்பொருள்
  
வருக, செல்க - விதித்தல் பொருள்
  
அருள்க, கருணைசெய்க - வேண்டல் பொருள்
  
வீழ்க, கெடுக - வைதல் (ஏசுதல்) பொருள்
  
வியங்கோள் வினையில் ஒருமை, பன்மை என்னும் பாகுபாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 காரண வினை வினையெச்சம்
 
மழை பெய்தால் பயிர் வளரும் மழை
  
பொழிந்ததாயின் குளம் குட்டைகள் நிரம்பும்
  
மழை பெய்யின் குடிநீர் கிடைக்கும்
  
மழை பெய்ததெனின் வெப்பம் தணியும்
  
மழை பெய்ததென்றால் நாடு செழிக்கும்
 
இத்தொடர்களில் மழை பெய்தல் ஆகிய செயல், பயிர் வளர்தல் போன்றவற்றுக்குக் காரணமாக அமைகிறது என்பது புலப்படுகிறது.
 
இவற்றிலும் ஆல், ஆயின் முதலிய விகுதிகளே (பின்னொட்டுகள்) காரணப் பொருளைத் தெரிவிக்கின்றன.
 
இவ்வாறு வரும் வினைகளைக் காரண வினை என்று இக்காலத்தில் குறிப்பிடுகிறார்கள்.