PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
செய்வினை
 
புத்தகம் படிக்கிறேன்
  
கொசு கடித்தது
  
நாயை அடிக்கிறான்
 
இத்தொடர்களில் உள்ள வினைச் சொற்கள் செய்வினைச் சொற்களாகும்.
 
இவற்றை வேறு ஒரு முறையிலும் கூறலாம்.
 
செயப்பாட்டுவினை
 
புத்தகம் (என்னால்) படிக்கப்படுகிறது.
  
நான் (கொசுவால்) கடிக்கப்பட்டேன்.
  
நாய் (அவனால்) அடிக்கப்படுகிறது
 
இத்தொடர்களில் செயப்பாட்டு வினைகள் உள்ளன.
 
செய்வினையில் படிக்கிறேன் என்றிருந்த சொல், செயப்பாட்டு வினையில் படிக்கப்படுகிறது என மாறுகிறது.
 
படு என்னும் துணைவினைச் சொல் இவை அனைத்திலும் சேர்ந்து வருகிறது.
 
உடன்பாட்டு வினை
 
வருகிறேன், செய்கிறான் செய்வேன், பெறுவான் என்பன போன்ற வினைச்சொற்கள் ஒரு வினையைச் செய்வதையோ, செய்யப் போவதையோ அறிவிக்கின்றன.
 
இவற்றை உடன்பாட்டு வினைகள் என்கிறோம்.
 
ஒரு செயலைச் செய்வதற்கு உடன்பட்ட நிலையைத்தான் இவை அறிவிக்கின்றன.
 
எதிர்மறை வினை
 
வாரேன் (வர மாட்டேன் என்பது பொருள்)
 
செய்யேன் (செய்ய மாட்டேன் என்பது பொருள்)
 
செய்யான் (செய்ய மாட்டான் என்பது பொருள்)
 
பெறான் (பெற மாட்டான் என்பது பொருள்)
 
என்னும் சொற்கள் ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையைப் புலப்படுத்துகின்றன.
 
எனவே இவை எதிர்மறைவினைகள் என்று சுட்டப்படுகின்றன.
 
வினைமுற்றுச் சொற்களில் எதிர்மறை இருப்பது போன்று பெயரெச்ச, வினையெச்சச் சொற்களோடு ‘ஆ’ சேர்ந்தும் எதிர்மறைப் பொருள்படும்.