PDF chapter test TRY NOW

உம்

'உம்’ என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் பொருள்களில் வரும்.
 
மழை பெய்தும் புழுக்கம் குறையவில்லை. (எதிர்மறை உம்மை)
  
பாடகர்களும் போற்றும் பாடகர். (உயர்வு / சிறப்பு)
 
 
ஓகார இடைச்சொல்  ஒழியிசை, வினா, சிறப்பு (உயர்வு, இழிவு), எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலை ஆகிய எட்டுப் பொருளில் வரும் என்று நன்னூல் கூறுகிறது.

தற்காலத்தில் ஓகார இடைச்சொல் பிரிநிலைப் பொருளில் அதிகமாக வருகின்றது.

அதைத் தவிர ஐயம், உறுதியாகக் கூறமுடியாமை, மிகை, இது அல்லது அது, இதுவும் இல்லை - அதுவும் இல்லை போன்ற பொருள்களிலும் வருகின்றன.
 
இன்றைக்கு மழை பெய்யுமோ? (ஐயம்) 
  
பூங்கொடியோ மலர்க்கொடியோ பேசுங்கள். (இது அல்லது அது) 
  
பாலுவோ கண்ணனோ பேசாதீர்கள். (இதுவும் இல்லை - அதுவும் இல்லை)
 
 
ஏகார இடைச்சொல் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் வரும் என்று நன்னூல் குறிப்பிடுகின்றது.
 
தற்காலத்தில் ஏகாரம் தேற்றப் பொருளில் (அழுத்தம்) மட்டுமே வருகிறது.
 
அண்ணல் காந்தி அன்றே சொன்னார். நடந்தே வந்தான்.
  
தான்
 
'தான்’ என்னும் இடைச்சொல்லும் அழுத்தப் பொருளில்தான் வருகின்றது.
 
சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் வருகிறதோ, அதனை முதன்மைப்படுத்துகின்றது.
 
ஒரு சொற்றொடரில் ஒருமுறை மட்டுமே வருகிறது.
 
நிர்மலாதான் நேற்று விழாவில் பாடினாள்.  
  
நிர்மலா நேற்றுதான் விழாவில் பாடினாள்.  
  
நிர்மலா நேற்று விழாவில்தான் பாடினாள்.

நிர்மலா நேற்று விழாவில் பாடினாள்தான்.
 
வேறுபாட்டை உணருங்கள் :
 

நிர்மலாதான் பாடினாள்.
  
(தான் – இடைச்சொல்)

நிர்மலா தானும் பாடினாள்.
  
(தான் – தற்சுட்டுப் படர்க்கை ஒருமை இடப்பெயர் – பெயர்ச்சொல்)
 
மட்டும் இச்சொல் வரையறைப் பொருள் தருகிறது.
 
முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருள்களிலும் வருகிறது.
 
படிப்பு மட்டும் இருந்தால் போதும். (வரையறைப் பொருள்).