PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஆவது
இது பொருள்களில் வரும் இடைச்சொல்லாகும்.
 
ஐந்து பேராவது வாருங்கள். (குறைந்த அளவு)

அவனாவது, இவனாவது செய்து முடிக்க வேண்டும். (இது அல்லது அது)

முதலாவது, இரண்டாவது,... (வரிசைப்படுத்துதல்)
  
கூட 
 
என்னிடம் ஒரு காசு இல்லை. (குறைந்தபட்சம்)

தெருவில் ஒருவர் கூட நடமாடவில்லை. (முற்றுப்புள்ளி)

அவனுக்கு வரையக்கூடத் தெரியும். (எச்சம் தழுவிய கூற்று)
 
 
வினாப்பொருளில்வரும்இடைச் சொல்லாகும்.

என்னும் இடைச்சொல் சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் இணைந்து வருகிறதோ அச்சொல் வினாச்சொல் ஆகிறது.
 
புகழேந்தி நேற்று உன்னுடன் பேசினானா?

புகழேந்தி நேற்று உன்னுடனா பேசினான்?

ஆம்
  
 
சொற்றொடரில் இறுதியில் வந்து இசைவு, சாத்தியம், பொருத்தம் ஆகிய பொருள்களிலும், தகவலாகவும், வதந்தியாகவும் செய்தியைக் கூறுவதற்கும் பயன்படுகிறது.
 
உள்ளே வரலாம். (இசைவு)
  
இனியன் தலைநகரம் போகிறானாம். (தகவல் / செய்தி)
  
பறக்கும் தட்டு நேற்று பறந்ததாம். (வதந்தி / பொய்மொழி)
 
இடைச்சொற்களைக் கண்டறிவதற்கு வாசிப்போம்.
  
பெண்ணடிமை போக வேண்டும்; பெண், கல்வி பெற வேண்டும். பெண்கள் படித்தால்தான் தம் சொந்தக் காலில் நிற்கலாம். பெண், கல்வி கற்றால் வீடும் நாடும் முன்னேறும். சமுதாயத்தின் சரிபாதியான பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு.
 
பழத்தான் தான் – (தான்)

வீடும் நாடும் – (உம்)
  
சமுதாயத்தின் – (இன்)
  
பெண்களுக்கும் – (உம்)
  
உரிமைகளும்– (உம்)
 
நமது முன் சந்ததியார்களுக்கு இருந்ததை விட, அதிகமானவசதிகள் நமக்கு உள்ளன. அவர்களின் காலம், அடவியில் ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க, குரு காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந்து, பாடங்களைச் சொல்லித்தரும் முறை இருந்த காலம், ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம். இப்போதுள்ளது உலகை நமது வீட்டுக்கு அழைத்து வந்து காட்டக்கூடிய காலம். பாமர மக்கள் பாராளும் காலம். மனவளத்தை அதிகப்படுத்தும் வழிகள் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம்.
 
இருந்ததை விட – (விட)
  
வசதிகள்– (கள்)
  
அவர்களின் – (இன்)
  
பாடசாலைக்கு – (கு)
  
வீட்டுக்கு – (கு)
  
ஆடவியில், ஆற்றோரத்தில் – (இல்)
 
உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம், ஆகிய இடைச்சொற்களைப் பயன்படுத்திய சொற்றொடர்களை வாசிப்போம்.

1. உம் - தலைவர்களும் போற்றும் தலைவர் காமராஜர்
 
2. ஓ - அவனோ இவனோ இதைச் செய்தது
 
3. ஏ - அவன் படித்தே முன்னேறினான்
 
4. தான் - அவன் தான் பார்த்தான்
 
5. மட்டும் - உங்களில் ஒருவர் மட்டும் முன்னால் வாருங்கள்
 
6. ஆவது - என்றைக்காவது நூலகம் போயிருக்கிறாயா?
 
7. கூட - ஒருவர் கூட சாட்சி சொல்லவில்லை
 
8. ஆ - அவன் படித்தானா?
 
9. ஆம் - தலைமை ஆசிரியர் உள்ளே வரலாம் என்றார்

10. ஆகிய  - தேனாகிய அமுது மொழி தமிழ்
 
பொருத்தமான இடைச்சொற்களைப் பயன்படுத்திய தொடர்களைப் பார்ப்போம்.

1. மணற்கேணியைப்போல் விளங்கும் நூல்தான் உறுதுணை என இருக்கிறது.
 
2. பெண்களைப் படிக்க வைக்காத காலத்திலும் பெண் இனத்திற்கும் பெருமை சேர்க்கும்படிக்கு நம் முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவராக வந்தார்கள்.

3. மக்களின் மனங்களில் உலக அறிவு புக வழி செய்ய வேண்டும்.