PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உரிச்சொற்கள்

உரிச்சொற்கள் பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன.

உரிச்சொல் இசை, குறிப்பு, பண்பு  என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும்.

உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை.

ஆனால் இவை தனித்து வழங்கப்படுவதில்லை.

உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.

அனைத்தும் பொருள் உடையவை.

ஒரு சொல் பல பொருளுக்கு உரியவை

கடிமலர் – மணம் மிக்க மலர்

கடிநகர் - காவல் மிக்க நகர்

கடிவிடுவதும் - விரைவாக விடுவோம்

கடி நனி - கூர்மையான நுனி

பல சொல் ஒரு பொருள்

உறு, தவ, நனி என்ற மூன்று உரிசொற்களும் மிகுதி என்னும் பொருளில் வருகின்றன.

உறுபசி ; தவச்சிறிது ; நனி நன்று
உரிச்சொற்கள், பெயரையும் வினையையும் சார்ந்து அவற்றிற்கு முன்னால் வந்து பொருள் உணர்த்துகின்றன.
மேலும் அவை

1) ஒரு சொல் பல பொருள்களுக்கு உரியதாய் வருவதும் உண்டு
 
2) பல சொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு
 
மழ, குழ என்பவற்றிலிருந்து உருவானவை மழலை, குழந்தை போன்ற சொற்கள்.

உவப்பு (உவகை), பசப்பு (நிறம் மங்குதல்), பயப்பு (பயன்) போன்றவை அப்படியே பயன்படுகின்றன.
 
செழுமை என்பது செழிப்பு, செழித்த, செழிக்கும் எனப் பெயராகவும், வினையாகவும் பயன்படுகிறது.
 
விழுமம் என்பது விழுப்பம், விழுமுதல், விழுமிய எனப் பெயராகவும் வினையாகவும் பயன்படுகிறது.
 
பிற உரிச் சொற்களும் அவ்வாறே தற்காலத்தில் பயன்படுகின்றன.
அன்று என்பது ஒருமைக்கும்
 
அல்ல என்பது பன்மைக்கும் உரியன.
 
சான்று :
  
இது பழம் அன்று
  
இவை பழங்கள் அல்ல.
 
எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்.
 
எத்துணை என்பது அளவைவையும் காலத்தையும் குறிக்கும்.
 
சான்று :
 
எத்தனை நூல்கள் வேண்டும்?
  
எத்துணை பெரிய மரம், எத்துணை ஆண்டு பழமையானது.