PDF chapter test TRY NOW
சீர்
நேர் என்பதோடு உகரம் சேர்ந்து முடிவது உண்டு.
அதனை நேர்பு என்னும் அசையாகக் கொள்வர்.
நிரை என்னும் அசையோடு உகரம் சேர்ந்து முடியும் அசைகள் நிரைபு என்று கூறப்படும்.
இவை வெண்பாவின் இறுதியாய் மட்டுமே அசையாகக் கொள்ளப்படும்.
ஈரசைச் சீர்களுக்கு, ‘இயற்சீர்’, ‘ஆசிரிய உரிச்சீர்’ என்னும் வேறு பெயர்களும் உண்டு.
ஓரசைச் சீர்
அசை - வாய்பாடு
நேர் - நாள்
நிரை - மலர்
நேர்பு - காசு
நிரைபு - பிறப்பு
ஈரசைச் சீர்
மாச்சீர்
அசை - வாய்பாடு
நேர் நேர் - தேமா
நிரை நேர் - புளிமா
விளச்சீர்
நிரை நிரை - கருவிளம்
நேர் நிரை - கூவிளம்
மூவசைச் சீர்
காய்ச்சீர்
அசை - வாய்பாடு
நேர் நேர் நேர் - தேமாங்காய்
நிரை நேர் நேர் - புளிமாங்காய்
நிரை நிரை நேர் - கருவிளங்காய்
நேர் நிரை நேர் - கூவிளங்காய்
கனிச்சீர்
அசை - வாய்பாடு
நேர் நேர் நிரை - தேமாங்கனி
நிரை நேர் நிரை - புளிமாங்கனி
நிரை நிரை நிரை - கருவிளங்கனி
நேர் நிரை நிரை - கூவிளங்கனி
காய்ச்சீர்களை “வெண்சீர்கள்” என்று அழைக்கிறோம்.
அலகிட்டு வாய்பாடு கூறுதல்
மூவசைச் சீர்களை அடுத்து நேரசையோ அல்லது நிரையசையோ சேர்கின்ற பொழுது நாலசைச்சீர் தோன்றும்.