PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇருவிதையிலைத் தாவர இலையின் உள்ளமைப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள படம், இரு விதையிலைத் தாவர இலையின் உதாரணமாக, மா இலையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தின் ஒரு பகுதியைக் காட்டுகிறது.
ஒரு வித்திலைத் தாவர இலையின் உள்ளமைப்பில் இருக்கும் திசுக்கள் குறித்து இக்கோட்பாட்டில் காண்போம்.
இரு வித்திலைத் தாவர இலையின் மேல் பக்கத்தில் இருக்கும் வெளிப்புற அடுக்கு மேல்புறத் தோலாகும். இவை ஓரடுக்காலான மிக நெருக்கமாக அமைந்த பாரன்கைமா செல்களாலானது. மேல்புறத்தோலின் வெளிப்புற பகுதியில் கியூட்டிக்கிள் என்ற படலம் காணப்படும். இவற்றில் இலைத்துளைகளும் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கும்.
ii. கீழ் புறத்தோல்:
இரு விதையிலைத் தாவர இலையின் வெளிப்புற பகுதியில் கியூட்டிக்கிள் படலத்துடன் கூடிய ஓரடுக்காலான மிக நெருக்கமாக அமைந்த பாரன்கைமா செல்களாலமைந்த கீழடுக்கு உள்ளன. இவை கீழ் புறத்தோல் என அழைக்க படுகிறது. இவ்வடுக்கில் பல இலைத்துளைகளும் காணப்படுகின்றன. இலைத்துளைகள் ஒவ்வொன்றும் பசுங்கணிகத்தாலான இரண்டு காப்பு செல்களால் சூழப்பட்டுக் காணப்படுகிறது. மேலும் இவை நீராவிப்போக்கு நடைபெறவும் உதவுகின்றன.
iii. இலையிடைத் திசு:
இலையிடைத் திசு என்பது மேல்புறத் தோலுக்கும் கீழ்ப்புறத் தோலுக்கும் இடையில் காணப்படும் தளத்திசுவாகும். இவை மீசோபில் என்றும் அழைக்கப்படுகிறது. இது இரண்டு வெவ்வேறு வகையான பாரன்கைமா செல்களைக் கொண்டுள்ளது, அவையாவன
- பாலிசேட் பாரன்கைமா
- ஸ்பாஞ்சி பாரன்கைமா
1. பாலிசேட் பாரன்கைமா:
பாலிசேட் பாரன்கைமா மேல்புறத்தோலுக்கு கீழே உள்ளது. இவை அதிக பசுங்கணிகங்களைக் கொண்ட நீளமான பாரன்கைமா செல்களாலானது. பசுங்கணிகங்கள் காணப்படுவதால் இவ்வகை செல்கள் ஒளிச்சேர்க்கை பணியை மேற்கொள்கின்றன.
2. ஸ்பாஞ்சி பாரன்கைமா:
பாலிசேட் பாரன்கைமாவிற்கு கீழேயுள்ள அடுக்கு, ஸ்பாஞ்சி பாரன்கைமா ஆகும். இவை கோள வடிவ அல்லது உருளையான அல்லது ஒழுங்கற்ற வடிவ செல்களால் நெருக்கமில்லாமல் இடைவெளிகளுடன் உள்ளன. இந்த செல்கள் வாயு பரிமாற்ற பணியை மேற்கொள்கின்றன.
iv. வாஸ்குலார் கற்றைகள்:
இலையின் மைய நரம்பு மற்றும் பிற நரம்பு பகுதிகளில் வாஸ்குலார் கற்றைகள் உள்ளன. ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையும் சைலம் மற்றும் புளோயம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவ்வகை வாஸ்குலார் கற்றையில் மேல்புறத் தோலை நோக்கி சைலமும் , கீழ்புறத் தோலை நோக்கி புளோயமும் உள்ளது. பாரன்கைமா செல்களாலான கற்றை உறை வாஸ்குலார் கற்றையைச் சுற்றி காணப்படுகின்றது. இரு விதையிலை தாவர இலையின் வாஸ்குலார் கற்றை, ஒருங்கமைந்தவை, ஒன்றிணைந்தவை, மற்றும் மூடியவை.