PDF chapter test TRY NOW

ஒரு விதையிலைத்  தாவரத்தண்டில், கேம்பியம் இல்லாததால் வாஸ்குலார் கற்றைகள் மூடப்பட்ட நிலையில் இருக்கும். எனவே, இவற்றில் இரண்டாம் நிலை வளர்ச்சி மற்றும்  ஆண்டு  வளையங்கள் காணப்படுவதில்லை . இக்கோட்பாட்டில் ஒரு விதையிலைத்  தாவரத்தண்டின் உள்ளமைப்பு குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
 
YCIND20220804_4089_Plant anatomy and physiology_07.png
ஒரு விதையிலைத் தாவரத்தண்டின் குறுக்கு  வெட்டுத் தோற்றம்
 
மேலே கொடுக்கப் பட்டுள்ள படம், ஒரு விதையிலைத் தாவரத்தண்டிற்கு உதாரணமான மக்காச் சோளத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தின் ஒரு பகுதியைக் காட்டுகிறது.
 
ஒரு வித்திலை தாவரத் தண்டின் உள்ளமைப்பில் இருக்கும் திசுக்கள் குறித்து இக்கோட்பாட்டில் காண்போம்.
 
புறத்தோல்:
 
ஒரு வித்திலைத்  தாவரத் தண்டின்வெளிப்புற அடுக்கு புறத்தோலாகும். இவை ஒரே ஒரு அடுக்கிலான பாரன்கைமா செல்களால் ஆனது. மேலும் இவற்றின் வெளிச் சுவர்ப் பகுதியில் கியூட்டீக்கிள் படலம் படிந்திருக்கும். மேலும் இப்பகுதியில் பலசெல் தூவிகள் காணப்படுவதில்லை, அதோடு புறத்தோல் துளைகளும் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
 
புறத்தோலடித் தோல்:
 
இந்த அடுக்கு, ஸ்கிளிரன்கைமா செல்களாலான சில அடுக்குகளால் ஆனது. இச்செல்களுக்கு இடையில் ஆங்காங்கே குளோரன்கைமா செல்கள் இருக்கும். இவை தாவரங்களுக்கு உறுதியளிக்கும் பணியை மேற்கொள்கின்றன.
 
தளத்திசு:
 
தளத்திசு என்பது புறத்தோலடித் தோலிற்குஉட்பகுதியிலுள்ள அனைத்து பகுதிகளையும் குறிப்பனவாகும். ஒரு வித்திலைத் தாவரத்தண்டில் அகத்தோல், புறணி, பெரிசைக்கிள் மற்றும் பித் என எந்த வேறுபாடும் காணப்படுவதில்லை.
 
iv. வாஸ்குலார் கற்றை:
 
மேலே கொடுக்கப்பட்ட ஒரு விதையிலை தாவரத்தண்டின் குறுக்கு  வெட்டுத் தோற்றத்தைப் பார்க்கும் பொழுது பல வாஸ்குலார் கற்றைகள் தளத்திசுவில் சிதறிக் கிடப்பதை நம்மால் காண இயல்கிறது. மேலும் இவ்வகை தாவர தண்டில் வாஸ்குலார் கற்றைகள் சாதாரணமாய் காணப்படாமல் மனித மண்டை ஓடு வடிவிலிருக்கும். மேலும் இவற்றை சுற்றி ஸ்கிளிரன்கைமா செல்களாலான கற்றை உறையும் காணப்படும்.
 
ஒரு விதையிலைத்  தாவரத்தண்டில் வாஸ்குலார் கற்றைகள் பின்வருமாறு அமைந்திருக்கும். அவையாவன;
  • ஒன்றிணைந்தவை
  • ஒருங்கமைந்தவை
  • மூடியவை
  • உள்நோக்கு சைலம் கொண்டவை
சைலம்:
 
மேலே கொடுக்கப்பட்ட ஒரு விதையிலைத் தாவரத்தண்டின் குறுக்கு  வெட்டுத் தோற்ற படத்தைப் பார்க்கும் பொழுது, அதன் சைலக் குழாய்கள் ஆங்கில எழுத்தான '\(Y\)' வடிவில் அமைந்துள்ளதை நம்மால் காண இயல்கிறது. வாஸ்குலார் கற்றையில் புரோட்டாசைலம் மற்றும் மெட்டாசைலம் இரண்டும்  உள்ளன. சில புரோட்டாசைலக் கூறுகள் முதிர்ந்த வாஸ்குலார் கற்றைகளில் சிதைவடைந்து போவதால் ஒரு இடைவெளி உருவாகிறது. அவ்விடைவெளி  புரோட்டாசைல இடைவெளி என்று அழைக்கப்படுகிறது.
 
புளோயம்:
 
சல்லடைக்குழாய் கூறுகள், துணை செல்கள் மற்றும் பாரன்கைமா ஆகியவற்றை புளோயம் கொண்டுள்ளன. ஒரு விதையிலைத் தாவரத்தண்டில், புளோயம்
நார்கள் இல்லை
.
 
c. பித்:
 
வாஸ்குலார் கற்றைகளால்சூழப்பட்ட தண்டின் பெரிய மையப் பகுதி பித் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ஒரு வித்திலைத் தாவரத்தண்டில், மையப் பகுதியில் பித் இல்லை.